பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 93

தனது சிந்தனையின் ஞான வழியாக அரவிந்தர் வேத கால உணர்வுகளுக்குப் பாரதத்தை உயர்த்தும் ஆன்மீகப் பக்தியை வளர்ப்பது என்ற முடிவுக்கு அவர் திட்டங்களை வகுத்தார்.

அதனால், வங்காளத்தின் அரசியலைத் துறந்தார். அந்த அரசியல் வழிகளை விட்டுவிட்டு, தனிமையில் நின்று சாதனை களைப் புரிந்திட அவர் முடிவு செய்தார்.

இந்தத் தனிமைப் பாதையைக் கடைபிடிக்க அரவிந்தர், தென்னிந்தியாவில் உள்ள, அப்போது பிரெஞ்சு ஆட்சிக்குக் கட்டுப்பட்டிருந்த பாண்டிச்சேரி என்ற புதுவை மாநிலத்தைச் சேர்ந்த நகருக்கு 1910-ஆம் ஆண்டு வருகை தந்தார்.

பாண்டிச்சேரிக்கு அவருடன் நான்கு ஆன்மீகவாதிகள் சீடர்களாக வந்தார்கள். பாண்டிச்சேரிக்கு வந்த அரவிந்தர் அன்று முதல் எந்த ஓர் அரசியல்வாதியையும் சந்திக்க மறுத்து விட்டார். ஒவ்வொரு நாளும் அவர் தனிமையில் அமர்ந்தே தியான சிந்தனையில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தார்.

அரவிந்தர் தனிமையைத் தேடி பாண்டிச்சேரிக்கு வந்த பிறகு, பாரத நாட்டின் அரசியல் சூன்யம் பிடித்து விட்ட ஒரு தேக்க நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. அதனால், இந்திய அரசியல் தலைவர்கள் எல்லாம் அவரை அரசியலுக்கு மீண்டும் திரும்பி வருமாறு வற்புறுத்தி அழைத்தார்கள்.

பஞ்சாப் மாநிலச் சிங்கம் என்று மக்களால் போற்றப்பட்ட லாலா லஜபதிராய், பாண்டிச்சேரி நகருக்கு வருகை தந்து அரவிந்தரை நேரில் சந்தித்தார். அரசியல் பாதைக்கு மீண்டும் திரும்பி வருமாறு அவர் வேண்டினார். அதனை அரவிந்தர் மறுத்தார்.

இந்திய விடுதலைக்காக அப்போது அரும்பாடுபட்டு வந்த மகாத்மா காந்தியடிகள், தமது மகன் தேவதாஸ் காந்தியை அரவிந்தரிடம் அனுப்பி வைத்து, மீண்டும் அவரை அரசியலுக்குத் திரும்பி வருமாறு கேட்டுக் கொள்ளச் செய்தார். அதற்கும் அரவிந்தர், தனது பாதையை தனியொரு வழியாகவே