பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$32 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

முரட்டு வேட்டியும், மார்பு தெரியும் பணியனும், நடுவகிடு எடுத்து, கழுத்து வரை தொங்கும் தலை மயிரும், முகத்தில் பருவத்தின் மெருகும், கண்களில் மென்மையான கனவுகள் நிறைந்த பாவமும், கருப்பு நிறமும், ஒமப்பொடி போன்ற ஒல்லியான உடலும் உள்ள ஓர் இளைஞராகவே எனக்கு அவர் தென்பட்டார்”.

ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் ஆகிய மொழிகளில் புலமைப் பெற்ற வல்லாளராகவே அரவிந்த கோஷ் காணப்பட்டார்.

எடுத்துக்காட்டாகக் கூறுவதான்ால், ஒருவனிடம் பரங்கி மலைக் குன்றைக்காட்டி, இதுதான்் இமயமலை என்றால் நம்புவானா? எவ்வளவு வியப்பை அவன் அப்போது பெறுவானோ? அதைவிட வியப்பைத்தான்் நான் அவரை முதலில் பார்த்தபோது பெற்றேன் என்று எழுதுகிறார்.

(குறிப்பு : தீனேந்திரகுமார் தனது நூலில் குறிப்பிடும் போது, தேவகர் குன்றைக் காட்டி இது இமயமலை என்றால் எவ்வளவு வியப்பாக இருக்குமோ என்று அவர் ஊரிலே உள்ள ஒரு சிறு குன்றை எடுத்துக் காட்டுகிறார். அந்தக் குன்றை அதன் பருமனை, உயரத்தை, தோற்றத்தை மற்றவர்களால் அறிந்து கொண்டிருக்க முடியாதல்லவா? அதனால்தான்் நான் தீனேந்திரர் உவமையை நமது வாசகர்களுக்காக, பரங்கிமலை குன்றை எடுத்துக் காட்டினேன்.)

அரவிந்தர் மிகவும் எளிய வாழ்க்கையை நடத்தினார். எந்த விதப் பகட்டும் அவருக்குப் பிடிக்காது. வேலையில்லை என்றதும் புத்தகத்தை ஏந்திக் கொள்வார். அதனால், அவருக்கு அறிவுவேட்கை அதிகமானது. கற்கும் கல்வியே அவரை ஞானியாக மாற்றியது.

அரவிந்தர் பெற்ற சம்பளம் ஆயிரம் ரூபாய்தான்். அதிகம் எதுவும் செலவு செய்ய மாட்டார். இந்தச் சிக்கனத்திலும் அவருக்கு மாதக் கடைசியில் கை செலவுக்குக்கூட காசு இருக்காது; அப்படியானால், அவரது பணம் எங்கே போகிறது?