பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# ÚS ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அந்தக் கப்பலிலே அரவிந்தரால் வரமுடியாததற்கு, அவர் மன்னருடன் சேர்ந்து இந்தியா வர இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்தக் காரணத்தை அரவிந்தகோஷ் உடனே தனது தந்தைக்குத் தந்தி மூலம் தெரிவித்திருக்கலாம்.

அவ்வாறு அரவிந்தர் தெரிவிக்கத் தவறியதால்தான்், மகன் குறிப்பிட்டிருந்த கப்பல் நடுவழியில் தண்ணிரில் மூழ்கிப் போனதால், மகனும் கப்பலோடு மூழ்கி மாண்டு போனானே என்ற மகன் பாசத்தால், தர்ம குணம் கொண்ட ஒரு பரோபகாரியான டாக்டர் கிருஷ்ணதன்கோஷ9ம் மயக்கமாகத் தரையில் வீழ்ந்து, நினைவு திரும்பாமலேயே மாண்டு போனார் - பாவம் இந்த சாவுக்குக் காரணம் யார்? விதியா? மதி வென்றிருக்கும் வாய்ப்பும் இருந்ததே! அந்தத் தவறு யாருடையது? எப்படியோ ஒர் ஆன்மா பிரிந்தது:

மன்னருடன் அரவிந்தர் இந்தியா திரும்பி வந்ததும், முதலில் தனது தமையன்மார்களையும் பெற்றோரையும் காண விரும்பினார்.

அரவிந்தரின் மூத்த அண்ணனான விநல்யூஷன்கோஷ், கூச்பிகார் சமஸ்தான்த்தின் மன்னரிடம் பணி புரிந்து வந்தார். இளைய தமையனாரான மனோமோகன் கோஷ் கல்கத்தா மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார்.

மனோமோகன்கோஷ் இங்லீஷ் மொழியில் பெரும் புலமையுடையவர். ஆங்கிலக் கவிதைகளை எழுதுவதில் வல்லுநராக விளங்கினார். அவரின் இங்லிஷ் கவிதைகளை ஆங்கிலப் புலமையுடைய கவிஞர்கள் அனைவரும் பாராட்டிப் பேசுமளவிற்கு ஆற்றல் வாய்ந்தவராக சிறந்திருந்தார்.

இந்தியா வந்த அரவிந்தர், தனது மூத்த தமையனாரான விநல்யூஷன் கோஷைச் சென்று சந்தித்தபோது, தகப்பனார் இறந்த சம்பவத்தை அவர் தனது தம்பியிடம் கதறி அழுதபடி தெரிவித்தார். அதைக் கேட்ட அரவிந்தர் இடியொலி கேட்ட நாகம்போல் மயங்கி வீழ்ந்தார்.