பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$54 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

'நான் தலை நிமிர்ந்தேன்; வழக்கு மன்ற பீடத்தில் மாஜிஸ்டிரேட்டுக்குப் பதிலாக வாசுதேவன் வீற்றிருந்ததைக் கண்டேன். சர்க்கார் வக்கீலைப் பார்த்தேன்; அங்கு சர்க்கார் வக்கிலே இல்லை; அங்குக் கண்ணப்பிரானே அமர்ந்திருந்தார்; என் தோழர், என் அன்பர் அங்கு உட்கார்ந்து புன்னகை புரிந்து கொண்டிருந்தார்.

'பகவான் கேட்டார் . ஏன் இன்னுமா அஞ்சுகிறாய்? நான் எல்லா மனிதர்களுக்குள்ளும் நிறைந்திருக்கிறேன்; அவர் களுடைய செயல்களையும் சொற்களையும் இயக்குவிப்பவன் நானே. நான் உடனிருந்து காப்பாற்றுகிறேன்; நீ அஞ்சக் கூடாது.....'

"அந்த மரத்தடியில், பகவான் ஆனந்தமாய் குழலூதிக் கொண்டே நிற்பது போலவும், அந்த இனிமையில் என் மனத்தைப் பிய்த்து வெளியில் இழுப்பது போலவும் சில சமயம் எனக்குத் தோன்றுகிறது. என்னை அனைத்துக் கொண்டிருக் கிறவன்; என்னை மடியில் ஏந்திக் கொண்டிருக்கிறவன் யார் என்பதைத் தெளிவாக உணரலானேன்!...”

இதனால் சிறை அவருக்கு விடுதலை அளித்தது என்று

அரவிந்தர் நினைக்கிறார்! அந்தக் காட்சியை அடுத்துப் பார்ப்போம்: