பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* G2 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

சிவில் சர்விஸ் தேர்வை எழுதிட அவர் படித்துக் கொண்டிருந்தார். அந்தத் தேர்வை எழுதிய பின்பு, அதே ஆண்டில் அவர் ஐ.சி.எஸ். தேர்வும் எழுதினார். இந்தத் தேர்வில் அவர் நான்காவது மாணவராக வெற்றி பெற்றார்.

இந்தத் தேர்வில் கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிப் பரீட்சைகளும் இடம் பெற்றிருந்தன. அவற்றையும் எழுதினார் அரவிந்தர். முதல் மாணவராக வெற்றி பெற்றார்.

கிரேக்கம், இலத்தீன் மொழிகள் உலகப் பழைய மொழி களைச் சேர்ந்தவை. அவை மிகவும் கடினமானவை. அத்தகையக் கடினத்தையும் அவர் வெற்றி கொண்டார் என்பதற்காக, அறிஞர் களும் - பல்கலைப் பேராசிரியர்களும் அவரைப் பாராட்டினார்கள்.

தேர்வுகளில் வெற்றி பெற்று வந்த அரவிந்தர், சிவிலியலனாக ஆக முடியவில்லை. தேர்வு வெற்றிகள் வெளி வந்த இரண்டாண்டுகளுக்குப் பிறகு, அந்தத் தேர்வாளர்கள் குதிரை சவாரியிலும் கலந்து கொண்டு மதிப்பெண் பெற வேண்டும். ஏனென்றால், அதுவும் ஒரு தேர்வாகும்!

குதிரையேற்ற சவாரியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால்தான்், ஐ.சி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றதாகப் பொருள். அதனால், அவர் சிவிலியனாக ஆக முடியவில்லை.

இந்தச் செய்தியை அரவிந்தர் தனது தந்தைக்கு அறிவித்தார். ஐ.சி.எஸ். பட்டம் பெற்று மகன் மாவட்டக் கலெக்டராக, மாஜிஸ்திரேட்டாக பணியாற்ற வருவார் என்ற பேரார்வத்துடன் எதிர்பார்த்திருந்த டாக்டர் கிருஷ்ணதன் கோஷ9க்கு, அரவிந்தரின் குதிரையேற்றம் செய்தி பெரும் அதிர்ச்சி தரும் ஏமாற்றமாகி விட்டதால், அவரால் பொறுக்க முடியவில்லை.

உடனே தந்தை மகனுக்குத் தந்திக் கொடுத்து "நீ இலண்டனை விட்டுப் புறப்பட்டு இந்தியா வந்து விடு" என்றார்: தந்தியைப் பெற்ற அரவிந்தரும், தான்் இந்தியா வரும் நாளை தந்தைக்கு அறிவித்தார்.