பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

† 44 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அதற்கான மனுக்களைக் கொடுத்துக் கொண்டு, கடைசியில் பிரிட்டன் ராஜா - ராணிக்கு காட் சேவ் தி கிங் என்ற வாழ்க கோஷம் போட்டுக் கொண்டிருப்பதே அன்றையக் காங்கிரஸ் மிதவாதிகள் கொள்கை.

இந்த மிதவாத இரந்துண்ணும் அரசியல் - அரவிந் தருக்கோ, திலகருக்கோ ஒத்து வரவில்லை. அதனால், அரவிந்தருடைய பூரண சுய ராஜ்ஜியக் கோரிக்கையைக் காங்கிரஸ் ஏற்றாக வேண்டும் என்று அரவிந்தரால் வற்புறுத்தப் பட்டது. அதனால், தீவிரவாத அணியினர்க்கும், மிதவாத அணியினர்க்கும் இடையே கருத்து வேற்றுமை என்ற பூகம்பம்

இதற்கிடையே சூரத் நகரில் இந்திய தேசியக் காங்கிரஸ் பேரியக்க அவை கூடியது. காங்கிரஸ் தலைவர் யார் என்ற போட்டி எழுந்தது. தமிழ் நாட்டிலே இருந்து பல காங்கிரஸ் தலைவர்கள் சேலம் விஜயராகவாச்சாரியாரைப் போன்றவர்கள் அங்கே சென்று கூடினார்கள்.

தலைவர் தேர்தலில், கோபால கிருஷ்ண கோகலே என்ற மிதவாதத் தலைவரைத் தேர்வு செய்ய மிதவாதிகள் தந்திரம் செய்தார்கள். அந்தப் பேரியக்க அவைக்கு ராஷ்பிகாரி கோஷ் தலைமை ஏற்றார்.

சூரத் மாநாட்டில், லோகமான்ய பாலகங்காதர திலகர் என்ற தீவிரவாதக்காரர் கொள்கை விளக்கம் பேச மேடை வந்தார். அவரைப் பேச விடாமல் மிதவாதக் காங்கிரஸ்காரர்கள் கூச்சலிட்டார்கள்.

ஆனால், மராட்டிய சிங்கமான திலகர், கம்பீரமாகவும், பிடிவாதமாகவும் மேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது செருப்பு ஒன்று பறந்து வந்தது. ராஷ்பிகாரிகோஷ் தலையை அது தாக்கியது. பிறகு நாற்காலி பறந்து வந்து சுரேந்திரநாத்