பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

ஆனால், அதல்ல உண்மை. உன் அப்பாவிக் கணவன்தான்் அவனையும், நூற்றுக் கணக்கான மற்றவர்களை யும் அந்த வழியே, அது நல்ல வழியோ? கெட்ட வழியோ இழுத்து வந்திருக்கிறான். இன்னும் ஆயிரக் கணக்கானவர்களை இழுக்கப் போகிறான். நான் இருக்கும் போதே என் வேலை பூர்த்தி ஆகும் என்று நான் கூறவில்லை. அது கட்டாயம் ஆகும்.

உன்னை இப்போது கேட்கிறேன். இந்த விஷயத்தில் நீ என்ன செய்ய விரும்புகிறாய்? மனைவி கணவனின் சக்தி ஆவாள். நீ உஷாவின் மாணவியாகி, துரைமார்களின் பூஜை மந்திரத்தை ஜபிக்கப் போகிறாயா? கணவனின் சக்தியை உனது துயரத்தால் குறைக்கப் போகிறாயா? அல்லது பரிவாலும் உற்சாகத்தாலும் கணவனின் சக்தியைப் பெருக்கப் போகிறாயா?

என்னைப் போன்ற சாதாரனப் பெண் இவ்வளவு பெரிய காரியங்களில் என்ன செய்ய முடியும்? எனக்கு மனோபலம் இல்லை. புத்தி இல்லை. அந்தக் கருத்துக்களை பற்றி எல்லாம் சிந்திக்கவே எனக்கு அச்சமாக இருக்கிறது? என்று நீ சொல்லலாம். அதற்கு ஒரு வழி இருக்கிறது.

பகவானிடம் சரண் அடை, கடவுள் கருணை, பலம் என்ற அருள் நெறியில் நீ ஒரு முறை புகுந்தால் போதும். உன்னிடமுள்ள குறைகளை எல்லாம் அவர் நீக்கி விடுவார். ஆண்டவனைச் சரணடைந்தவர்களிடமிருந்து அச்சம் அகலும்.

என்மீது உனக்கு நம்பிக்கை இருந்தால், பத்து பேர் சொல்வதைக் கேளாமல், நான் கூறுவதையே கேட்டால், நான் என் பலத்தையே உனக்கு வழங்குகிறேன். அதனால் என் பலம் குன்றாது குறையாது; மேலும் கூடும்.

மனைவி கணவனின் சக்தி என்கிறோமே. அதன் பொருள் என்ன? கணவன் தன் மனைவியிடம் தன் பிரதி உருவத்தைக்