பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 153

அண்டியவரை ஆதரிப்பது பேரறம்! ஆனால், சகோதர, சகோதரிகளுக்குச் செய்வதால் மட்டும் கணக்கு தீர்ந்து விடாது.

இந்தக் கொடி காலத்தில் நாடு முழுவதுமே என் வீட்டு வாயிலில் புகல் தேடியுள்ளது. இந்த நாட்டில் எனக்கு முப்பது கோடி சகோதர சகோதரியர் உள்ளனர்.

அவர்களில் பலர் உணவில்லாமல் சாகின்றார்கள். பெரும்பான்மையோர் துன்பத்தாலும், துயரத்தாலும் துவண்டு எப்படியோ உயிரைக் காத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும்.

இந்த விஷயத்தில் என் அறத் துணைவியாக நீ இருப்பாயா? என்ன சொல்கிறாய்? சாதாரண மனிதர்களைப் போல் உண்பதும், உடுப்பதும் மிகத் தேவையான பொருள்களை மட்டும் வாங்குவதும், எஞ்சியவற்றை ஆண்டவனுக்கே ஒப்புவித்தல் செய்து விடுவதுதான்் என் விருப்பம், நீயும் என்னுடைய இந்த ஏற்பாட்டுக்கு இசைந்தால், தியாகம் செய்ய முற்பட்டால் என் விருப்பம் நிறைவேறும்.

நான் எவ்வித முன்னேற்றமும் அடையவில்லையே என்று நீ சொல்லுகிறாய். இதோ, முன்னேற்றத்துக்கான ஒரு வழியைக் காட்டியிருக்கிறேன். இந்த வழியில் நீ நடப்பாயா?

இரண்டாவது பைத்தியம்

இரண்டாவது பித்தம் சமீபத்தில்தான்் எனக்குப் பிடித்தது. என்னவானாலும் சரி, ஆண்டவனை நேருக்கு நேர் பார்த்துவிட வேண்டும் என்பதுதான்் அது.

அடிக்கடி ஆண்டவன் பெயரைச் சொல்வதும், எல்லோரும் அறியப் பிரார்த்தனைச் செய்வதும், நான் எவ்வளவு தர்மவானாக