பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 177

ஆசிரமம் என்றால் பண்டைக் கால முனிவர்கள் எங்கோ ஓரிடத்தில், அது காட்டிலோ, நாட்டின் ஓரத்திலோ ஒலைக் கீற்றுகள் வேய்ந்த பன்னகச் சாலையாகவோ இருக்கும்.

சில சந்நியாசிகள் ஒலைகளால் கட்டப்பட்ட குடிசையை அமைத்துக் கொண்டு, இடுப்பில் லங்கோடு ஒன்றைக் கோவணம் போலக் கட்டிக் கொண்டு, நீண்ட அழுக்குத் தோய்ந்த ஜடையும், நகமும் வளர்த்துக் கொண்டு, மெலிந்த உடலோடு தண்டத்தைக் கக்கக் கவட்டில் தாங்கி, தனக்கு முன்னே கமண்டலங்களையும் திருவோட்டையும் சான்றாக வைத்து உட்கார்ந்து கொண்டு இருப்பார்கள்.

இந்த கோவணாண்டிகளுக்கு முன்னே சில சீட கோடிகள் பயபக்தி உணர்வுகளோடு ஞான வைராக்கியம் குறித்துக் கேள்விகளை எழுப்பி, பதிலையும் பெறும் காட்சிகளை நாம் கண்டிருக்கின்றோம்.

நமது திரையுலக பிரம்மாக்களும் அதைப் படமாகக் காட்டுவார்கள்; மக்களும் அதைப் பார்ப்பார்கள்! பிரேமா நந்தர்களைப் போன்றவர்களையும், அவர்களுக்கேற்ற சீட கோடிகள் அவர்களைச் சந்நியாசி மகானாகப் போற்றுவதை இன்றும் நாம் காண்கிறோம்.

இன்றைய இந்த சாமியார்கள் நாட்டின் மூலைக்கொருவ ராகத் தோன்றுகிறவர்கள். அவர்களால் தூய்மையான, புனித மான, தெய்வத் தன்மையான ஆன்மீக ஆசிரம வாழ்க்கைக்குக் களங்கம் ஏற்பட்டு விடுகின்றது.

அதனால், யோகக் கலையும், தியான ஞானமும் போலித் தன்மை பெற்றுக் காமக் கோட்டமாகி விடுமோ என்று அஞ்சியோ என்னவோ அரவிந்தர் பெருமான், தமது யோகத்தில் சந்நியாசத்தை ஒப்பு கொள்ளவே இல்லை என்பதையும் நாம் கூர்ந்து நோக்க வேண்டும்.