பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்:

சரி போகட்டும். அப்படியானால் அந்தக் கல்வி மையத்தின் நோக்கம் தான்் என்ன? எழுமல்லவா கேள்வி?

அன்னையின் கல்விப் புரட்சி

பல்லாயிரம் ஆண்டுகளாக வழிவழி வந்துள்ள அஞ்ஞான மனித இயல்புக்கு ஏற்றவாறே - சிந்தித்தல், உணர்தல், செயல் படுதல் இவற்றிலிருந்து மானவர்கள் முதலில் விடுபட வேண்டும். பழைமையான இந்தப் பாதையிலே போகும் பழக்கத்தையும், வழக்கத்தையும் கைவிடல் வேண்டும்.

இதற்கடுத்து, மகான் அரவிந்தர் ஆன்மீக உபதேசத்திற்கு உகந்தவாறு, ஓர் உன்னதமான, புனித வாழ்க்கையை, தெய்வீக வாழ்க்கையை, மனிதனால் வாழ முடியும் என்பதை மாணவர்கள் உணரும்படி செய்ய வேண்டும்.

இங்கு கற்பிக்கப்படும் கல்வியின் இலட்சியம், குழந்தைகளை யும், மாணவர்களையும் அத்தகைய தெய்வீக வாழ்க்கைக்குத் தயார் செய்வதுதான்் ஆசிரமக் கல்வியின் அடிப்படை நோக்கம் ஆகும்.

மாணவர்களின் எண்ணிக்கை அன்று பெரியது; அவர்களின் தரமே முதலில் கவனிக்கப்படும். நன்றாகக் கல்வி கற்கிறார்களா? அறிவாளிகளா? என்பதல்ல; விழிப்புடைய ஆன்மாக்களா மாணவர்கள்? என்ற நோக்கமே முக்கியம்.

பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களால், ஏதாவது வேறு பணிமனைகளுக்குச் சென்று பணம் வருவாய் பெற முடியுமா என்பதற்கு இடமில்லை. காரணம், தெய்வீக வாழ்க்கைக்கு அடிப்படை அமைப்பதுதான்் ஆசிரமக் கல்வியின் நோக்கம்.

இந்தியாவின் தலைசிறந்த வேத விற்பன்னர், பண்டித சத்வ வேதர் என்பவர், அவர் ஒருமுறை புதுவை ஆசிரமக் கல்வி நிலையம் வந்தார். அதாவது 1920-ஆம் ஆண்டில், தன்னுடைய 95-ஆம் வயதில்: