பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அன்னை அவர்கள் மேலும் கூறும்போது, ஒவ்வொரு மரண தேவதைக்கும் ஒரு நாளைக்கு இவ்வளவு பேர்களை மரணப் படுத்த வேண்டும் என்று கணக்கு இருக்கின்றது. அந்த கனக்கிற்கேற்ப சரியாக திட்டமிட்டு, வேலை நடத்தும் நிறுவனம் அது. தனக்கு என்று குறிக்கப்பட்ட மனிதன் சாகப் போகின்ற போது, அவன் அருகே போய் அந்த மரண தேவதை அமர்ந்து கொள்ளும்.

'உனக்கு அதைப் பார்க்கக் கூடிய திறமை இருந்து, போதிய சக்தியும் இருந்தால், நீ, அதனிடம், நீ அவனை எடுத்துக் கொண்டு போவதை நான் தடை செய்கிறேன் என்று, கூறலாம். அது போய் விடும். இவ்வாறு நடந்திருக்கிறது ஒரு தடவை அன்று பல முறைகள்: ஜப்பான் நாட்டிலும் பிரான்சிலும்!

சாக இருந்தவன் பிழைத்துக் கொள்வான். ஆனால், அவனுக்குப் பதில் வேறோர் ஆள் இங்கிருந்து போவான். அது அவனுக்குப் பக்கத்து வீட்டுக்காரனாகவோ, அல்லது அவனுடைய விரோதியாகவோ கூட இருக்கும்.

மூன்றாவது அற்புதம்

அன்னையின் இன்னொரு அனுபவம் இது. உலகப்

போருக்குப் பிறகு ஜப்பான் நாட்டில் பல இடங்களில் பரவி வந்த

பயங்கா ப்ளு காய்ச்சல் சம்பந்தமான பிரச்சனை இது.

1919-ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தில் ஒரு பயங்கர மான விஷ ஜூரம், ஜப்பான் நாடு முழுவதும் பரவியது. பல்லாயிரக் கணக்கான மக்கள் அங்கே அந்தக் காய்ச்சலுக்குப் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்க சம்பவமாகும்.

ஜப்பான் நாட்டில் இதற்கு முன்பு இவ்வளவு பேர்களைக் கொன்ற ப்ளு காய்ச்சல் என்ற நோய் வந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு சம்பவம் ஆகும்.

ப்ளு காய்ச்சல் நோய் வந்துவிட்ட மூன்றாம் நாள், நோய் கண்டவன் மாண்டு போவான். இறந்தோர் எண்ணிக்கை