பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோகமும் - ஆன்மீகமும் இல்லாமல் பாரத நாடு உயர்வு பெற முடியாது!

மேல்நாட்டுத் தத்துவங்களையும், இலக்கியங்களையும், மத ஆய்வுகளையும் ஆழ்ந்து கற்று மேதையானது போலவே, அரவிந்தர் இந்தியத் தத்துவங்களையும், இலக்கியங்களையும், காவியங்களையும், வேதம், வேதாந்த சித்தாந்தங்களையும் ஆழ்ந்து கற்று மேதையாகத் திகழ்ந்தார்.

அதே நேரத்தில் இந்திய அரசியல் போக்கையும், பிரிட்டிஷ் ஆட்சியின் கெடுபிடி அராஜக நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்தார்.

இலண்டன் மாநகரில் அரவிந்தர் கல்வி கற்றபோதே இந்திய அரசியல் போக்குகளை உற்று நோக்கிக் கொண்டுதான்் இருந்தார். அயர்லாந்து நாட்டின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை அரவிந்தர் வாழ்த்தினார்; போற்றினார்.

அயர்லாந்து விடுதலை பெற்றதும் அதே சுதந்திர வேட்கை அரவிந்தருக்கும் ஏற்பட்டது. அந்த நாடு பெற்ற சுதந்திரம் போல் இந்தியாவும் பெற வேண்டும் என்று அவர் விரும்பினார்.

இந்திய நாடு பிரிட்டிஷ் கொடுங்கோலாட்சிக்கு அடிமை யாக இருப்பது அரவிந்தருக்கு மனவேதனையாக இருந்தது.