பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*33 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

பரோடா கல்லூரி அரவிந்தருக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாயைச் சம்பளமாகக் கொடுத்தது. தேசியக் கல்லூரியில் அவர் பெற்ற ஊதியம் வெறும் நூற்றைம்பது ரூபாய்தான்் என்றால், அவருடை நாட்டுணர்ச்சியின் பற்றை எவ்வாறு போற்றுவதோ எவ்வளவு பெரிய தியாகம் பார்த்தீர்களா? இந்தச் சம்பளத்தில் அவரும், குடும்பமும் வாழ வேண்டும்.

இந்த நிலையைக் கேள்விப்பட்ட பரோடா மன்னரின் மனம் பொறுக்கவில்லை. எத்தகைய ஒர் அறிவாளிக்கு நூற்றைம்பதா ஊதியம்? என்பதைப் பொறுக்க முடியாமல், அரவிந்தருக்கு ஒருவரைத் தூது அனுப்பி உடனே அழைத்து வருமாறு உத்தரவிட்டார்.

வாலிய தேசிய வெறியால், வெள்ளையர் ஆட்சி எதிர்ப்பால், அரவிந்தருக்கு பரோடா மன்னருடைய அருமையான பாசம் புரியா மல் போய் விட்டது. அதில் மன்னரின் பாசத்தை தேச பக்தி வென்று விட்டது. பரோடவுக்குப் போகமலே இருந்து விட்டார் அவர்.

தேசியக் கல்லூரியிலாவது அவரால் இறுதிவரைப் பணியாற்ற முடிந்ததா? தேசிய கல்லூரி மாணவர்கள் சுதேசிக் கிளர்ச்சிகளில் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினார்கள் என்ற காரணத்திற்காக அவர்கள், கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

அரவிந்தர் அந்த மாணவர்களைத் தேசியக் கல்லூரியில் சேர்த்து கொள்வோம் என்றார். அவருடையக் கொள்கையைக் கல்லூரி நிர்வாகம் ஏற்க மறுத்து விட்டது. அத்துடனில்லாமல் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நடைபெறும் கல்வி முறைகளையே தேசியக் கல்லூரியிலும் நடத்த வேண்டுமென அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள்.

அரவிந்தருடைய கொள்கைக்கு நேர் விரோதமல்லவா இந்த நடவடிக்கை? அதனால் அவர் ஏற்க மறுத்தார். இவை போன்ற கருத்து மோதல்கள் பலமாக மோதவே, அரவிந்தரால்