பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி #91

ஏற்றுக் கொள்வதால் பாரத நாட்டுக்கு பெரும் நன்மை உண்டாகும் என்று அரவிந்தர் எண்ணினார்.

அதற்காக, அரவிந்தர் தனது சார்பாக ஒரு சிறப்புத் தூதுவரை, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களிடம் அனுப்பி, கிரிப்ஸ் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார். அவருடைய திட்டத்தைக் காங்கிரஸ் தேசீயத் தலைவர்கள் ஏற்க மறுத்து விட்டார்கள்.

அன்று கிரிப்ஸ் திட்டத்தை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால், பாகிஸ்தான்் பிரிவினை ஏற்பட்டிருக்காது. லட்சக்கணக்கான படை வீரர்கள் போரில் செத்திருக்க மாட்டார்கள். கோடிக்கணக்கில் பணம் வீணாகி இருக்காது.

பாரத நாட்டின் அரசியலில் அரவிந்தர் வலிய வந்து பங்கெடுத்து கொண்டதற்குக் காரணம், அவருக்கிருந்த பழைய தேசாபிமானம்தான்் பாரத நாட்டு விடுதலைதான்்!

அரவிந்தர் நாற்பது ஆண்டுகள், பாண்டிச்சேரியிலிருந்து என்ன செய்தார் என்பதை கூறுவது கடினமான ஒன்று.

அரவிந்தரின் ஆசிரமம் ஓர் ஆன்மீகச் சோதனைச் சாலை. அங்கு நடந்து வரும் சாதனைகளை உள்ளுணர்வு படைத்தவர் களால்தான்் இன்றும் அறிய முடியும்,

பாண்டிச்சேரி ஆசிரமத்திலே தங்கும் ஆன்ம பேறு பெற்றவர்களும், அங்கே வருகை தரும் சுற்றுலா மக்களும், இந்த அற்புதமான ஆன்ம சோதனைக் கூடத்தை ஒருமுறை கண்டு உணர்ந்த பின்பு, உலகத்திலேயே இத்தகையதொரு ஆன்மீக தனி உலகத்தை, தெய்வச் சிந்தனைகளை ஒளி பரப்பும் பூமியை, மனித நேய சமத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் மண்ணை, வேறு எங்குமே காண முடியாது என்ற மன நிறைவைப் பெற்றுச் செல்வதைப் பார்க்கின்றோம்.