பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 8t

மக்களுக்கு நாள்தோறும் அமுதம் என்ற பிரசாதங்களை வழங்கிக் கொண்டு வாழ்ந்த இறையடி யார் இலக்கணம் உடையவர்கள் ஆவர்.

பல காலம் இவ்வாறு வாழ்ந்து வந்ததின் எதிரொலியாக அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. தெய்வீக மனமுடைய அந்தப் பெற்றோர் தங்களது பெண் குழந்தைக்கு மீராபாய் என்ற திருப்பெயரைச் சூட்டி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஞானச் செல்வச் செழிப்போடு பலரும் போற்றும் வகையில் வளர்த்து வந்தார்கள்.

மீராபாயின் கிருஷ்ண பக்தி

மீராபாய் தனது விளையாட்டுப் பொம்மையாக கிருஷ்ணன் சிலையை வைத்து விளையாடுவாள்! பெற்றோரும் மற்றோரும் அந்தக் குழந்தைக்குக் கிருஷ்ணனுடைய கதைகளையே பக்திச் சுவை சொட்டச் சொட்டக் கூறி மகிழ்விப்பார்கள்.

அரண்மனையிலும் அடிக்கடி பாகவதம் கதா காலட் சேபமும், ஆடல் பாடல்களும் நடக்கும். அவற்றில் மீராபாய் கண்ணன் திருவிளையாடல்களைக் கேட்டுப் பேரானந்தம்

பெறுவார்.

மீராவும் வளர்ந்தாள்; அவள் பக்தியும் போட்டிப் போட்டு வளர்ந்தது - தெய்வ பாசமானது திருமணப் பேச்சு எழுந்தது; அரச குமாரர்களின் ஓவியங்கள் அரசனிடம் குவிந்தன!

இதைக் கண்ட மீரா, மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன் என்ற எண்னத்திலே வாழ்ந்த அவள், ஓவியங் களை எல்லாம் பொருட்படுத்தவில்லை! கண்ணனையே மனப்பேன் என்ற எண்ணமானாள்: இந்த எண்ணம் தோழிகளுக்குப் புரிந்து பெற்றோர்களுக்கும் தெரிந்தது.

கண்ணன் வழிபாடுகள்

தனது கன்னிமாடத்திலேயே கண்ணனுடைய வழிபாடு களை, சாதி, மதம் பேத மேதும் பாராமல், பக்த கோடிகள் சூழ்ந்து,