பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

ஐ.சி.எஸ். தேறியவர்கள், தேறும் வாய்ப்பிழந்தவர்கள், பேராசிரியர்கள் போன்ற பல துறையாளர்களும் அந்தப் புரட்சியாளர்கள் குழுவில் இருந்தார்கள்.

புரட்சியாளர்கள், பிரெஞ்சு, ஜெர்மன், ஹீப்ரு, லத்தீன், வளமான இங்லிஷ் போன்ற மொழிகளைக் கற்று வல்லுநர் களாகவும் இருந்தார்கள்.

இத்தனைக் கல்வி அருமைகள் பெற்ற அனைவரும், அரவிந்தரே அந்தப் புரட்சியாளர்கள் குழுக்களுக்குத் தலைவராக இருக்க வேண்டும் என்று அரவிந்தரை அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், அரவிந்தர் அதை ஏற்க மறுத்து, அவர் வழி தனி வழி என்ற எண்ணத்தோடு செயல்பட்டார்.

பிரிட்டிஷ் அரசு, அரவிந்தர்தான்் இந்த புரட்சிக்காரர் களுக்கு எல்லாம் தலைவராக இருக்க வேண்டும் என்று யூகித்தது. அதனால், அரவிந்தர் பணிகளை எல்லாம் கண்காணித்தபடியே இருந்தது.

குதீராம்போஸ், பிரபுல்லா சாகி என்ற இரண்டு புரட்சி இயக்க வாலிபர்கள், 1908-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் நாளன்று பீகாரிலுள்ள முசுப்பர்பூர் மாவட்ட நீதிபதி கிங்ஸ் போர்டு தனது காரிலே வருகிறார் என்று எண்ணி வெடி குண்டுகளை வீசினார்கள்.

அந்த நீதிபதி, பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு கடும் தண்டனை கொடுத்தவர். ஒரு சிறுவனுக்குத் தண்டனையாகச் சவுக்கடிகளை வழங்கியவர் என்பதால், அவரைப் பழிக்குப் பழிவாங்க அவரைக் கொல்வதற்காக கார்மீது வெடிகுண்டை புரட்சிவாதிகள் வீசினார்கள்.

ஆனால், நீதிபதி அந்தக் காருள் வரவில்லை. எதிர்பாரா விதமாக இந்திய மக்களது அன்புக்குரியவரான பிரிங்கல் கென்னடி என்பவருடைய மனைவியும், மகளும் அந்தக் காரில் வந்ததால், அவர்கள் அந்த குண்டு வீச்சுக்குக் கோர பலியானார்கள் பாவம்: