பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 1 +7

மன்னரும் அரவிந்தரும் வாரம் இரண்டு மூன்று முறைகளாவது கட்டாயம் சந்தித்தே தீருவார்கள். அரவிந்தரைப் போல ஒர் அறிவுக் கூர்மையான நண்பரது நட்பு, பழக்க வழக்கம் தேவை என்று நினைப்பவர் அரசர் கெய்க்வார்:

அரவிந்தரும் அரசர்மீது அளவிடமுடியாத அன்பை வைத்திருந்தார். மன்னருக்குள்ள அறிவு, ராஜதந்திரம், சிந்தனை வளம், செயல் சுறுசுறுப்பு அனைத்தும் ஒரு பெரிய சாம்ராச்சியத்தையே ஆட்சி செய்யும் தகுதியுடையவர் என்று அரவிந்தர் பாராட்டுவார் மன்னரை - நண்பர்களிடம்!

புத்தகத்தின்மீது அளவற்ற அக்கறையும், சிரத்தையும் கொண்டவர் அரவிந்தர். அதற்காக மற்றவர்கள் புத்தக இரவல் கேட்டால் மறுப்பவரல்லர் அவர் கொடுக்கும் நூலைக் குறித்து வைத்துக் கொண்டு, புத்தகத்தைப் பெற்றவர்கள் படித்து முடித்ததும் அவரே சென்று நேரில் பார்த்து கொடுத்ததை வாங்கி வந்து விடுவார். அதுபோலவே பிறருக்கு உதவி செய்வதிலும், அரைகுறை மனத்தோடு செய்ய மாட்டார். எடுத்துக்காட்டாக :

ஒரு முறை அரவிந்தர் தனது தாயாருக்குப் பணம் அனுப்ப மணியாடர் பாரத்தை எழுதிக் கொண்டிருந்த நேரத்தில், அவரருகே அமர்ந்திருந்த ஆசான் தீனேந்திரகுமார் தான்ும் தனது வீட்டுக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்று அரவிந்தரிடம் பணம் கேட்டார்.

அதற்குப் பதிலேதும் கூறாமல், அரவிந்தர் தனது பையைத் திறந்து அதிலுள்ள பணத்தை அப்படியே எடுத்துக் கொடுத்தார். பணம் குறைவாகவே இருந்தது. இதை எப்படி இரண்டு ஊர் உறவினர்களுக்கு அனுப்புவது? யோசித்தார் ஆசிரியர் அரவிந்தரைப் பார்த்து, கோஷ் சார், உங்களது தாயாருக்கு பணம் அனுப்புங்கள். ஃபாரமும் பூர்த்தி செய்து விட்டீர்கள்! அம்மாவுக்கே அனுப்புங்கள் கோஷ் என்றார்.