பக்கம்:தேன் சிட்டு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முரண்பாடுகள்


"இந்த உலகம் எல்லா நலன்களையும் பெற்று இன்பமாக இருக்க வேணும்; அதுதான் என்னுடைய ஆசை” என்றார் ஒரு பெரியவர்.

"எதற்காக உலகம் நலமாக இருக்கவேணும்? எல்லா நலன்களும் கிடைத்து இன்பத்தோடிருந்தால் மனிதன் விலங்காகிவிட மாட்டானா?” என்று பதட்டத்தோடுட ஒரு வழுக்கைத் தலையர் கேட்டார்.

தாம் கூறிய இந்தக் கருத்திற்காவது எதிர்ப்போ மாறுபாடோ இராது என்று பெரியவர் எதிர்பார்த் திருந்தார். இதிலும் அவர் ஏமாற்றமடைய நேரிட்டது.

இன்றைய உலகம் முரண்பாடுகள் நிறைந்தது; முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களிலே நம்பிக்கை கொண்டது. எதை ஒரு பகுதி வேண்டும் என்கிறதோ அதையே மற்றொரு பகுதி வேண்டவே வேண்டாம் என்கிறது. படை வலிமையைப் பெருக்குவதின் மூலமே உலகத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்பது இன்றைய உலகத்தில் உலவி வரும் ஒரு கருத்து. படைகளையெல்லாம் கடலிலே தூக்கி எறிந்துவிட்டு அஹிம்சை வழியைப் பின்பற்றினால் தான் உலகத்தில் போரின்றி அமைதி நிலவும் என்பது அதற்கு நேர்மாறாக உலவி வரும் மற்றொரு கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/33&oldid=1395333" இலிருந்து மீள்விக்கப்பட்டது