பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎 "தமிழ் இசை சம்பந்தமாக, சங்கீதத்துக்கு மொழி வேண்டுமா வேண்டாமா என்கிற வாதம் பிரமாதமாக இத்த இசை இயக்கத்தில் அடிபடுகிறது. மொழி பற்றி வித்தியாசம் ஏற்பட்டபடியால், மொழியே வேண்டாம் என்ற வாதம் போட்டால், நம் கட்சி பலமாகப் போய் விடுகிறது என்ற உத்தேசத்தின் மேல் சங்கீதத்துக்கு மொழியே வேண்டாம் என்று சிலர் சொல்கிரு.ர்கள். இது எப்படி இருக்கிறது என்ருல் தென்கலை வேண்டுமா, வடகலை வேண்டுமா என்று கேட்டால், இந்து மதமே வேண்டாம் என்பது போலவும், சிவன் கோயில் வேண்டுமா, விஷ்ணு கோயில் வேண்டுமா என்று கேட்டால், கோயிலே வேண்டாம் என்பது போலவும் இருக்கிறது. தியாகையர் தமிழில் பாடுவதற்குப் பதில், தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தெலுங்கில் பாடினர். அது ஒன்றே போதும் தமிழிசை இயக்கத்துக்கு ஆதரவு' - "அவர் தமிழ் நாட்டிலே வளர்ந்து தமிழ்த் தேசத்தில் புகழ் பெற்றவர். ஆயினும் அவர் ஏன் தெலுங்கில் பாடினர்? தெலுங்கு நல்லது என்று அதில் அவர் பாடவில்லை. தெலுங்கு அவருக்குத் தாய் பாஷை ஆகியதால் அவர் அதில் பாடிஞர். நாமும் தாய் பாஷையில் பாடினுல்தான் நம் ஆத்மாவுக்குத் திருப்தி கிடைக்கும், கடவுளுக்கும் காது கேட்கும்." ராஜாஜியின் இந்த வாசகத்தைப் படித்த சிலர், "இது என்ன, ராஜாஜி ஒரு கட்சிக்கு வக்காலத்து வாங்கிப் பேசுவது போல் இருக்கிறதே? தெலுங்கில் பாடினுல் கடவுளுக்குக் காது கேட்காதா, தமிழில் பாடினுல்தான் காது கேட்குமா?’ என்று கேட்கலாம். இப்படிக் கேட்பவர்கள் ராஜாஜியைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எஸ்கிமோ மொழியிலே பேசினலும் ஸர்வஞ்ஞனை இறைவனுக்குக் காது கேட்கும். மொழிகளை யெல்லாம் படைத்த முழு முதல் அல்லவா அந்த இறைவன். ஆஞல், ஒன்றை மறந்துவிடக் கூடாது. எஸ்கிமோ பாஷை தெரியாத நாம் எஸ்கிமோ பாஷையில் எழுதிய சாகித் யத்தை எப்படி அழகாகப் பாடிகுலு ம், நமக்கு உருக்கம் ஏற்

  • நண்பர் சோமுவின் நாட்குறிப்பில் 24/5/13ல் பதிவு செய்யப்பட்ட வாசகம் இது.