பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Fo தோன்றியுள்ளன்; இன்னும் தோன்றிக் கொண்டிருக் கின்றன. சபைகளின் எண்ணிக்கையைக் கொண்டு பார்த்தால் நமது ஒப்பற்ற இசைச்செல்வம் வளர்ந்தோங்கி வருகின்றது என்றுதான் தோன்றும். ஆனுல் அங்கெல்லாம் இசை அரங்குகள் எத்தனை நடைபெறுகின்றன என்று கணக்கிட்டதுண்டா? ஒரு மாதத்தில் நடைபெறும் களியாட்டங்களில் எத்தனை சதவீதம் இசைக்கு ஒதுக்கப்படுகின்றது? பரம்பரையாக வந்த இசையை விடப் புதிதாக முளைத்த மெல்லிசைக்கு அதிகமான ஆதரவு இருப்பதையும், அதிகமாகக் கூட்டம் கூடுவதையும் கவனித்ததுண்டா? நமது இளைஞர்களேக் கவர்வது மெல்லிசையே அல்லவா? சிந்தித்துப் பாருங்கள் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிருேம்? அடுத்த தலைமுறையினர் பூர்விகமான நமது இசையில் பற்றுதல் கொள்ளும்படி செய்யாவிட்டால் நமது சிறந்த கலையை இழந்துவிடுவோம். நாம் போற்றலாம். ஆனல் அதே போல இளந் தலைமுறையினரையும் இதன் பெருமையை உணர்ந்து போற்றும்படி செய்யாவிட்டால் நாம் நமது கடமையைச் செய்தவர்களாக மாட்டோம் . மாட்டோம், மாட்டோம், மாட்டோம் என்று மும்முறை யும் சொல்கிறேன். இன்று சங்கீத வித்வத் சபையும் (Music Academy) தமிழ் இசைச் சங்கமும் சேர்ந்து நமது இசையைக் காக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது. சண்டையிடும் காலம் மாறிவிட்டது. அடிப்படைக்கே ஆபத்து என்ருல் அதை உணர்ந்து முயற்சிகள் செய்ய வேண்டுவதில்லையா? உலக நாடுகள் எல்லாம் நமது இசையைப் போற்று கின்றன. மெய்தான். அந் நாடுகளிலுள்ள பலர் இதை