பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ĵĝ அவை மெருகு ஏறிப் பிரகாசிக்கும், பாடப் பாடத்தான் மெருகு ஏறும். புதிய கற்பனைகள், நளினங்கள், குழைவுகள் எல்லாம் தோன்றும். நவரசங்களில் இது போன்ற புதிய பாடல்கள் தோன்றிக் கங்கையும் காவிரியும் போல வற்ருது பெருக் கெடுத்து நமது சங்கீதம் ஓங்கி வளர வேண்டும் என்பதே பாரதியாரின் நோக்கமாகும். மேல் நாடுகளிலே பேத்தோவன் போன்ற பெரிய மஹான்கள் அந்த நாட்டு இசைக்கலையை வளர்த்திருக் கிமுர்கள். அவர்களுடைய உருப்படிகள் ஒப்பற்றவை, அமரத்துவம் வாய்ந்தவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆளுல் அவர்களுடன் மேல்நாட்டு இசைக்கலை நின்று விட்டதா? இன்றும் புதிய மேதைகள் அங்கு பழைய மரபை ஒட்டித் தோன்றுகிருர்கள். அவர்களே மக்கள் போற்று கிரு.ர்கள். நான் இங்கு உயர் தனிச் செம்மை வாய்ந்த இசையையே (Clasical Music) குறிப்பிடுகிறேன். பிற வற்றை அல்ல. - இனி பாரதியாரின் எண்ணங்களைப் படியுங்கள். பாட்டு என்ற தலைப்பிலேயே அவற்றைத் தருகின்றேன். எந்த வகையிலாவது நமது இசைச் செல்வம் ஓங்கி வளர வேண்டும் என்ற ஆசையிலேயே இவ்வளவு நீண்ட முன்னு ரையை எழுதினேன். வணக்கம். பெ. தூரன் குறிப்பு : பாரதியார் பாட்டைப் பற்றியும் இசையைப் பற்றியும் கூறியுள்ளவற்றில் பலவற்றை இம்முன்னுரையில் சேர்த்துள்ள்ேன். இதில் சேர்க்கப்பெருத வேறு பல பகுதி களைப் பிற்சேர்க்கையாகக் கொடுத்திருக்கிறேன். மேற்கொண்டு ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இவை பயன்படும் என்று நம்பு கிறேன்.