பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 றின் அருள் பெறலாம். தெய்வப் பிரஸ்ாதத்தை ஒருவன் பக்தியாலும், ஜிவதயையாலும், நேர்மையாலும், உண்மை யாலும், இடைவிடாத உழைப்பினலும் ஸ்ம்பாதிக்க (UÉ 14-t-ils · நாட்டிலே லங்கீதத்திற்குச் சரியான போஷணை செய்யும் ராஜாக்களும் பிரபுக்களும் இல்லை. எங்களுக்கு ஜீவனமோ கஷ்டமாயிருக்கிறது. மனக் கஷ்டம் இல்லாமல் இருந்தாலன்ருே ரஸ்ஞானத்தை வளர்த்துக் கொண்டு போகலாம்? சில வருஷங்களுக்குள்ளே சில கீர்த்தனங்களே வரப்படுத்திக்கொண்டு ஜீவனத்திற்கு வழிதேடவேண்டிய ஸ்திதி ஏற்பட்டிருககிறது. என்ன செய்யலாம்?' என்று நினைத்து மனமுடைந்து போகவேண்டாம். இப்போது உலக முழுவதிலுமே ராஜாக்களேயும் பிரபுக் களையும் நம்பி வித்தை பழகும் காலம் போய்விட்டது. பொது ஜனங்களே நம்பவேண்டும். இனிமேல் கலைகளுக் கெல்லாம் போஷணையும் ஆதரவும் பொது ஜனங்களிட மிருந்து கிடைக்கும். அவர்களுக்கு உண்மையான அபிருசி உண்டாக்கிக் கொடுப்பது வித்வான்களுடைய கடமை. பிறகு, நல்ல போஷணை கிடைக்கும். ஒரு பிரபு மாதம் ரூபாய் 100 கொடுப்பான். ஊர் சேர்ந்தால் தலைக்குக் கால் ரூபாயாக வசூல் பண்ணி மாதம் 1000 ரூபாய் கொடுக்கும். ஊரையே யஜமானனாகக் கொள்ள வேண்டும். ஊர்தான் ராஜா. இந்த ராஜாவுக்கு ஆரம்பத்திலே கொஞ்சம் ஞானம் அளித்துப் பழக்கங் கொடுத்தால். வித்தைகளுக்கு எவ்விதமான குறைவும் ஏற்படாது. நவ ரஸங்களும் சேரவேண்டும். கருளு ரஸ்மும் (அதாவது சோகரளலமும்) சிருங்கார ரஸ்முந்தான் நமது தேசத்தில் நடை பெறுகின்றன. மற்ற வீரம், கோபம் (ரெளத்ரம்) வியப்பு, வெறுப்பு, அச்சம், நகைப்பு, சாந்தம் என்ற ரலா