பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮧ8 கதையும் தோன்றின. இவையெல்லாம் பாரதியாருக்கு அமரத்வம் தருகின்றன என்று எல்லாரும் ஒப்ப முடிந்த கருத்தாகும். பாரதியாரின் மற்ற படைப்புகளும் அழிவற்றவை. கடல் போன்ற பாரதியார் இதயப்பரப்பிலே ஒவ்வொரு சிறு பகுதியையாவது காட்டக் கூடியவை என்பது என்னுடைய திடமான எண்ணம். இதிலே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதைப் பற்றி விவாதிக்க இங்கு நான் முன்வரவில்லை. இது இடமும் அல்ல. பாரதியார் குயில் பாட்டு எழுதியபோது அவருக்கு ஏறக்குறைய முப்பது வயது இருக்கும். ஆற்றல், அறிவு. எழுத்து வன்மை எல்லாம் முதிர்ச்சி பெற்ற நிலையில் அவர் அதைப் படைத்திருக்கிரு.ர். அதிலே பாட்டைப் பற்றிப் பாரதியார் கூறியுள்ள பகுதிகள் பெரிதும் கவனத்திற்குரியவை: கானப் பறவை கலகலெனும் ஒசையிலும் காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும் ஆற்றுநீரோசை அருவி ஒலியினிலும் மானுடப் பெண்கள் வளருமொரு காதலினுல் ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும் ஏற்றர்ேப் பாட்டின் இசையினிலும், கெல்லிடிக்கும் கோற் ருெடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் சுண்னமிடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும் பண்ணை மடவார் பழகு.பல பாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும் வேயின் குழலோடு வீணை முதலா மனிதர் வாயினிலும் கையினிலும் வாசிக்கும் பல்கருவி நாட்டினிலும் காட்டினிலும் நாளெலலாம் நன்ருெலிக்கும் பாட்டினிலும் கெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்