பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களாவது அ.ை ஜீவித்திருக்க வேண்டும் என்கிருேம். கையாளாவிட்டால் ஜீவித்திருக்க முடியுமா? பேராசிரியர் கல்கி அவர்கள் இந்தக் கருத்தைப் பற்றி அழகாகக் கூறியுள்ளார். அவர் கூறுகிருர்: 'எந்த நாவிலும் சாஹித்யம் தோன்றும்போது அது புதிய சாஹித்யமாகவே இருக்கும். தியாகராஜ கீர்த்த னங்களும், தீகரிதர் கிருதிகளும் அவரவர்களுடைய காலத் தில் புதிய சாஹித்யங்கள்தான். அவற்றை வித்வான்கள் பாட மறுத்திருந்தால் சங்கீதக் கலை எவ்வளவு மகத்தான நஷ்டத்தை அடைந்திருக்கும்? 'பழமையைத்தான் கையாளுவோம், புதியதைத் தொடவே மாட்டோம்' என்ருல், கலைகள் காலத்துக் கேற்ப வளர்ச்சி அடைவதுதான் எப்படி? அவ்வப்போது புதிய தண்ணிர் பாயாத குளத்தைப் போலக் கலையும் தேக்கமடைந்து வற்றிப் போய் விடக்கூடும் அல்லவா? ஆகையால் கலை உலகில் புதுமைக்கும் இடம் இருக்க வேண்டும்." இந்தக் கருத்து ஆழ்ந்து சிந்திப்பதற்குரியது. பேராசிரியர் மேலும் கூறுவது போல, புதியனவற்றில் இன்றியமையாத பண்புகள் பொருந்தி இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். தொடவே மாட்டேன் என்று கண்களே மூடிக் கொண்டால் பண்புகள் உள்ளதைத் தெரிந்து கொள்வதுதான் எப்படி? வற்புறுத்தலுக்காகவோ, தாட்சண்யத்திற்காகவோ ஒரு பாடலை வித்வான் பாட வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். வித்வானுக்கு ஒர் உருப் படியின் சிறப்பு ஒரு சில தடவை தனியாகப் பாடிப் பார்க்கும்போதே தெரிந்துவிடும். அப்படி நல்ல பாடல் எளைப் பொறுக்கி இசை அரங்குகளில் பாடினல், பிறகு