பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சங்கீத விஷயம் பொதுப் பள்ளிக்கூடத்தில் சங்கீதம் கற்றுக் கொடுக்க வேண்டும். இது மற்ற நாகரிக தேசங்களில் சாதாரண மாக நடந்து வருகிறது. உயிரிலே பாதி ஸங்கீதம். சாஸ் திரத்தை யாருமே பேணுமலிருந்தால், பாடகர்கூட அதைக் கைவிட்டுவிடுவார்கள். ஆதலால் சுதேசமித்திரன் (விசேஷ அனுபந்தம்) பத்திரிகையில் ரீமான் பூரீநிவாசய் யங்கார் ஸங்கீதம் சீர்திருந்த வேண்டுமென்ற கருத்துடன் எழுதிய விகிதத்தைப் படித்தபோது எனக்குச் சந்தோஷ முண்டாயிற்று. இங்கிலீஷ் பாஷையிலே ஒரு பெரிய கவிராயன் ஸங்கீத ஞானமில்லாதவரைக் கள்ள ரென்றும் குறும்ப ரென்றும் சொல்விப் பழிக்கிருன். பாட்டு லகலருக்கும் நல்லது. தொண்டையும் எல்லோருக்கும் நல்ல தொண்டைதான்ென்பது என் மதம். கூச்சத்தாலும் பழக்கக் குறைவாலும் பலர் தமக்கு நல்ல குரல் கிடையா தென்று வீணே நினைத்துக் கொள்கிருர்கள். பாட்டுக் கற்க விரும் புவோர் காலையில் சூரியனுக்கு முந்தியே எழுந்து பச்சைத் தண்ணிலே குளித்துவிட்டுக் கூடியவரை சுருதியும் லயமும் தவருதபடி ஸ்ரளி வரிசை முதலியன பழக வேண்டும்.