பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&G 'நன்லு ப்ரேவ நீகிந்த தாமஸ்மா (என்ஃனக் க r辛示 உனக்கு இக்தர். தாமஸ்மா?) என்ற பல்லவி எடுத்தவுனேயே அர்த்தம் பளிரென்று வீசும். இப்படியே எல்லாக் கீர்த் தன்ங்களும் ஏற்பட்டிருக் கின்றன. இந்த மாதிரி ஏற்படுத்தவேண்டும் என்று தியாகையர் சிரமப்பட்டு வேலை செய்யவில்லை நெஞ்சிலே உண்மையிருந்தால் ஸங்கீதம் இயற்கையிலே இவ்விதமாகப் பிறக்கும். பிற்கா.:த்தில், பட்டணம் சுப்பிரமணிய அய்யர் முதலானவர்களின் பாட்டிலே இந்த லக்ஷணம் இல்லை. "வரமுலொஸ்கி' என்ற பாட்டை எடுத்திர்களானல், இசைக்கும் பொருளுக்கும சம்பந்தமே இல்லை என்பது விளங்கும். சொற்கள், வரங்கொடுத்துக் காப்பது உனக்கு அரிதா' என்று கேட்கின்றன. இசை சண்டைத் தாளம் போடுகிறது. இது நிற்க. வித்வான்கள் பழைய கீர்த்தனங்களைப் பாடம் பண்ணி புராதன வழிகளேத் தெரிந்துகொள்ளுதல் அவசியம். ஆனல் தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரி யாத பிற பாஷைகளில் பழம் பாட்டுகளே மீட்டும் மீட்டும் சொல்லுதல் நியாயமில்லே. அதனல் நமது ஜாதி ஸங்கீத ஞானத்தை இழந்துபோகும்படி நேரிடும். மேலும், 'பாட்டுக்குத் தாளமே யொழிய தாளத் திற்குப் பாட்டில்லே' என்ற விஷயத்தைப் பாடுவோர் தன்கு தெரிந்துகொளள வேண்டும். சிலவிதக் கூத்துக்களிலே, தாளத்திற்குப் பாட்டுப் பாடுதல் பொருத்தம். அங்கேகூட, முழுதும் தாள நயத்தையே கருதி இசை நயத்தை நாசம் செய்துவிடக்கூடாது. அப்படியிருக்க, 'பாட்டுக் கச்சேரி என்று பெயர் வைத்துக்கொண்டு அங்கே இசையின்பங் களைக் கொன்று தாள முழக்கத்தைப் பிரதானமாக்குதல்