பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர்க்க விரும்புகிறேன். வீடடிலே பந்துக்களின் முன் , விவாக ஸந்தர்ப்பங்களிலும் பாடும்போது கூச்சத்தினலே பாட்டை விடக்கூடாது. வித்தை விஷயத்தில் கூச்சங் காட்ட நியாயமில்லே. வித்தைப் பயிருக்கு விடுதலை நீர் பாய்ச்ச வேண்டும். மேலும் பெண்களுக்குள்ளே பொதுக் கல்வியை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமு மாக வளர்க்கவேண்டும். கல்வியறிவில்லாத மூடர் எந்தத் (ଟதாழி லும் நேரே செய்ய மாட்டார்கள். தவிரவும் பார்வி மெட்டிலே ஆரத்தி யெடுப்பது, இங்கிலீஷ் நலங்கு முதலிய கோரமான விகாரங்களுக்குத் துணை செய்யக்கூடாது. நமது நாடக சாலைக்குள்ளே கல்வியறிவும், சாஸ்திரப் பழக்கமும், நாகரீகமும் நுழையுங்காலம் வரை, நமது பெண்கள் நாடகப் பாட்டுக்களே கவனியாமல் இருப்பது நன்று. வேதாந்தக் கொடுமையையும் கொஞ்சம் குறைத்து விட்டால் பெரிய உபகாரம். குறிப்பு: முறையாக லங்கீதம் பயின்று பாடிவரும் பெண்மணிகளைப் பற்றி பாரதியார் இங்கே குறிப்பிட வில்லை; பொதுவாகக் குடும்பப் பெண்மணிகள் பாடு வதையே அவர் உள்ளத்தில் கொண்டு எழுதியுள்ளார் என்பது நன்கு கவனிக்கத் தக்கது. இன்று சில மாது சிரோண்மணிகள் முறையாக இசைத் தேர்ச்சி பெற்று உலகப் புகழ் பெற்றுள்ளதையும், நமது இசையின் பெருமையை எல்லா நாடுகளிலும் நிலை நாட்டியுள்ளதையும் அனைவரும் அறிவார்கள்.