பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置荔 பாட்டிலே உள்ளத்தைப் பறி கொடுத்த பாரதியார் பாட்டைப் பற்றிக் கேட்காமல் விடுவாரா? அவர் மேலும் கேட்கிருர் : ~&#6) పl கண்ணும் பாட்டினெடு தாளம்.மிக கன்ரு வுளத் தழுந்தல் வேண்டும்.பல பண்ணிற் கோடிவகை இன்பம்.கான் பாடத் திறனடைதல் வேண்டும் இவ்வாறு வரங்கேட்ட பாரதியார் பாட்டின் சிறப்பையும் இசையின் சிறப்பையும் தமது கவிதைகளிலே பல இடங்களிலே எடுத்துக் காட்டியுள்ளார். கடல் ஒலியோடு தமிழ்ச் சொல் இசையையும் சேர்க்க வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் வெளிப்படுத்துகின்ருர். சூரிய தரிசனம் என்ற பாடலில், வேதம் பாடிய சோதியைக் கண்டு வேள்விப் பாடல்கள் பாடுதற்குற்றேன் காத வார்கடலின்னெலி யோடு நற்றமிழ்ச் சொல் இசையையும் சேர்ப்பேன்" என்று ஆதவனைப் போற்றுகிரு.ர். பாரதியாருடைய படைப்பிலக்கிய ஆண்டுகளில் 1912ஆம் ஆண்டு ஒரு மணிமுடியாகத் திகழ்கின்றது. புதுச்சேரியிலே அடைக்கலம் புகுந்து பல இன்னல்களுக்கு ஆளாகி இருந்தாலும் வறுமை வெந்தழலிலே உழன்ற பாரதியாருடைய உள்ளம் புடமிட்ட பொன் போல உயர்ந்த இலக்கியங்களைப் படைத்து அவருக்கு அழியாப் புகழ் தந்தது. அந்த ஆண்டில்தான் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு என்ற இணையற்ற இலக் கியங்கள் உருப்பெற்றன; பகவத் கீதையின் தமிழ்மொழி பெயர்ப்பும், ஆறில் ஒரு பங்கு என்ற அற்புதமான