பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யில்லாமல் சாஸ்திரங்களுக்குக் கண்ணுடிபோல் விளங்கு வார்கள். "சிங்காரரளத்தை ஒரு கூத்தன் காண்பிற்கும் அபிநயங் களில் கூத்துப் பெண்ணுடைய அபிநயங்கள் கலக்காலாது. ஆண் மகனே பெண் ணுருக்கொண்டு கூத்தாடுவானுயின், அப்போது பெண்மை அபிநயங்கள் காண்பிக்கத்தகும். ஆண்மகன் உருமாருமல் கூத்தாடும்போது பெண்மை தோன்றலாகாது. "வீர ரஸத்தில் ஒருவன் தேர்ச்சியடைய விரும்புவான யின், ராமன் முதலிய அவதார புருஷர்களுடைய வடிவை அவன் தியானம் செய்யக் கடவான். நாராயண உபா ஸ்னேயே கூத்தனுக்கு வீர ரஸ்த்தில் தேர்ச்சி கொடுக்கும். பயாநக ரஸத்தை ஸ்பையிலே கூத்தன் அதிகமாக விவரிக்கலாகாது, எந்த நாட்டிலே கூத்தர் பயாதகத்தை யும் சோகத்தையும் அதிகமாகக் காட்டுகிருர்களோ, அந்த நாட்டில் பயமும் துயரமும் அதிகப்படும். 'நைச்ய பாவம் அதிகமாகத் தோன்றும் கூத்தினலே, ஒருநாட்டார் அடிமை இயற்கை மிகுதியாக உடையவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆதலால், கூத்தர் கூத்துகளில் அடிமைத்தோற்றத்தை மிதமிஞ்சிக் காட்டாத படி நாட்டார் கவனித்துக் கொள்ளவேண்டும். 'நாட்டிய சாஸ்திரத்தை உண்மையாகப் பயின்ருல், அதிலிருந்து ஆண்களுக்கு ஆண்மையும், பெண்களுக்குப் பெண்மையும் உண்டாகும். அதை நெறி தவறிப் பயிற்சி செய்தால் அதிலிருந்து ஆணுக்குப் பெண்மையும், பெண் னுக்கு ஆண்மையும் விகாரமாகத் தோன்றும். "நாட்டிய சாஸ்திரத்தை ஆதியிற் பரமசிவன் நந்திக் குக் கற்றுக் கொடுத்தார். அப்போது, பகவான் நந்தியை நோக்கி, கேளாய், நந்தி! அபிநயம் தவறுவதாலே ஜனங்