பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. முருகன் பாட்டு பல்லவி முருகா! - முருகா! - முருகா! சரணங்கள் வருவாய் மயில் மீதினிலே வடிவே லுடனே வருவாய்! தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் அடியார் பலரிங் குளரே! அவரை விடுவித் தருள்வாய்! முடியா மறையின் முடிவே அசுரர் முடிவே கருதும் வடிவே லவனே சுருதிப் பொருளே, வருக துணிவே, கனலே, வருக! கருதிக் கருதிக் கவலேப் படுவார் கவலைக் கடலேக் கடியும் வடிவேல் அமரா வதிவாழ் வுறவே அருள்வாய் ! சரணம், சரணம்! குமரா பிணியா வையுமே சிதறக் குமுறும் சுடர்வே லவனே, சரணம்: அறிவா கியகோ யிலிலே அருளா கியதாய் மடிமேல் பொறிவே லுடனே வளர்வாய்! அடியார் புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய்! குருவே! பரமன் மகனே! குகையில் வளருங் கனலே! தருவாய் தொழிலும் பயனும் அமரர் சமரா திபனே! சரணம் சரணம்: (முருகா) {முருகா) (முருகா) (முருகா) (முருகா) (முருகா)