பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. கண்ணன்-என் காதலன் (பாங்கியைத் தூது விடுதல்) ரசங்கள்: சிருங்காரம், ரெளத்ரம். கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்; கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்: எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம்-பின்னர் ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம். கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம்-தாங்கள் காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்: அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம்-என்னும் அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம். சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே-எங்கும் தோழமை யில்லை.படி தங்கமே தங்கம்: என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிருன்?-அவை யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடி! மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-தலே மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ? பொய்யை புருவமெனக் கொண்டவ னென்றே-கிழப் பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம். ஆற்றங் கரையதனில் முன்னமொருநாள்-என அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம் துற்றி நகர் முரசு சாற்றுவ னென்றே சொல்லி வருவையடி தங்கமே தங்கம். சோர மிழைத்திட்டாயர் பெண்களுடனே-அவன் சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல்லாம் வீர மறக்குலத்து மாதரிடத்தே வேண்டிய தில்லையென்று சொல். விடடீ!