பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற் சேர்க்கை 2 "பாட்டு ஸ்வலருக்கும் நல்லது. தொண்டையும் எல்லாருக்கும் நல்ல தொண்டை தானென்பது என் மதம். கூச்சத்தாலும் பழக்கக் குறைவாலும் பலர் தமக்கு நல்ல குரல் கிடையாதென்று வீணே நினைத்துக் கொள்கிரு.ர்கள். 'பாட்டுக்கற்க விரும்புவோர் காலையில் சூரியனுக்கு முந்தியே எழுந்து பச்சைத் தண்ணிரிலே குளித்து விட்டுக் கூடியவரை சுருதியும் லயமும் தவருதபடி லாளி வரிசை முதலியன பழக வேண்டும். உச்ச ஸ்தாயிதான் எப்போதும் நல்லது. உடம்பை நிமிர்த்து முகத்தை நேரே நிறுத்தி முகத்திலும் வாயிலும் கோணல் திருகலில்லாதபடி வாயை ஆவென்று சிங்கம் போலே திறந்து பாடவேண்டும்.: குரலைச் சரியான படி பழக்கினல் எல்லாருக்கும் பாட வரும் என்பது பாரதியாருடைய கொள்கை. எப்படிக் குரலைப் பழக்க வேண்டுமென்று அவர் சில நல்ல வழிகளை மேலே குறிப்பிட்டிருக்கிரு.ர். பாரதிபார் நபரலங்களும் ததும்பும் படியாகப் பாட்டின் உணர்ச்சிக்கு ஏற்றவாறு பாடுவார். அவருடைய பாடலைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே மக்கள் திரளாக வருவார்கள். சிறந்த சொற்பொழி வாளரான திரு. சத்தியமூர்த்தி ஒரு கூட்டத்தில் பேசி விட்டு நீங்கள் வழக்கமாகக் கேட்கும் பாரதி நாளேக்குப் பேசுவார். இன்று இத்துடன் & Irr.--5