பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ன்க்கிளிண்டுள்ள்ர். தங்க்ப் பாட்டு, நாட்டுப்புறப் பாடல் க்ன், பள்ளு, கிளிக்கண்ணி முதலியவற்றில் பாரதியாருக்கு விருப்பம் அதிகம். அவற்றைத் தழுவியும் சில பாடல்கள் செய்துள்ளார். பாடல்கள் எளிமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இவற்றைக் கையாண்டுள்ளார். வகைக்கு ஒன்று அல்லது இரண்டாகச் சில பாடல்களே இங்கு சேர்த்துள்ளேன். இவையல்லாத பல பாடல்களும் அவற்றின் இசையும் பாரதியாரின் சொந்தப் படைப்பேயாகும். பாரதியார் மழையைப்பற்றி ஒரு பாடல் இயற்றி யுள்ளார். அதைப்படிக்கும் போது மின்னல் வெட்டுவதை யும், மழை கொட்டுவதையும், இடி இடிப்பதையும் கேட்பது போன்ற பிரமை தட்டுகிறது. இதே போல ஊழிக்கூத்து என்ற பாடலும் அற்புதமாக அமைந் துள்ளது. பாரதியாருடைய பாடல்கள் பலவற்றை இசையுலகில் புகழ்வாய்ந்த வித்வான்கள் பலர் பாடியுள்ளனர்; இன்றும் பாடுகின்றனர். அவர்கள் பாடியதால் அவர்களுக்கும் புகழ் ஏறியது: பாடல்களும் புகழ் பெற்றன. அவற்றில் எல்லா வற்றையும் இங்கு சேர்ப்பது சாத்தியமில்லை. ஆறு பாடல் களை மட்டும் அவற்றைப் பாடியோரின் பெயரோடு இ க்கு இணைத்துள்ளேன். குறிப்பாகக் கூறவேண்டுமானுல் சங்கீத க்லாநிதி மதுரை மணி ஐயருக்குப் பிறகு பல பாட ல்க ளப் பாடி வருகின்றவர்கள் சங்கீத கலாநிதி திருமதி டி. கே. பட்டம்மாள் அவர்களும், சங்கீதகலாநிதி திருமதி எம். எஸ். சுப்புலஷ்மி அவர்களுமாவர். பல ரிகார்டுகளும் கொடுத்துள்ளனர்.