பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. 73 மாதர் தீங்குதித் பாட்டில் இருப்பாள். மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்: கீதம் பாடும் குயிலின் குரலேக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்; கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலிடை யுற்ருள் இன்ப மேவடி வாகிடப் பெற்ருள். (வெள்ளைத்) வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்; வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர் வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர், மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர், விரமன்னர்பின் வேதியர் யாரும் தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம் தரணி மீதறி வாகிய தெய்வம். (வெள்ளைத்) தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம், தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்: உய்வ மென்ற கருத்துடை யோர்கள் உயிரி னுக்குயி ராகிய தெய்வம்: செய்வ மென்ருெரு செய்கை யெடுப்போர் செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்: கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம், கடவளர் தெய்வம். (வெள்ளைத் சிறப்புறப் பாடியவர்: சங்கீத கலாநிதி மதுரை மணி அய்யர் அவர்கள்.