பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. ஜய பேரிகை ஜயபேசிகை கொட்டடா!-கொட்டடா ஜய பேரிகை கொட்டடா! சரணங்கள் 1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்: வியனுவ கனத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம் (ஜய பேரிகை) 2. இரவியி னெளியிடைக் குளித்தோம்-ஒளி இன்னமு தினக்கண்டு களித்தோம்; சரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்: காலன் நடுநடுங்க விழித்தோம். (ஜய பேரிகை) 3. காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள் கடலும் மலேயும் எங்கள் கூட்டம்: நோக்குத் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களி யாட்டம். (ஜய பேரிகை)