பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



களையும் பல தலைப்புக்களில் தொகுத்து, அவற்றிற்கு முன் தன்னுடைய குறிப்பையும், கருத்துக்களையும் கொடுத்துப் பாரதியார் சமூகச் சீர்திருத்தவாதியாகவே தமது எழுத்துப் பணியைத் தொடங்கினர் என்று தூரன் அவர்கள் நிரூபிக்க முயல்கிறார்கள். பாரதியாருடைய படைப்புக்களை முழுமையாக வம், ஆழ்ந்தும் படித்தவர்கள் தூரன் அவர்களுடைய இந்தக் கருத்திற்கு இணங்கவே செய்வார்கள். மேலெழுந்தவாரியாக அவருடைய தேசீயப் பாடல்களைப் படித்தவர்களும்கூட இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவேசெய்வார்கள் என்பதில் ஐயமில்லை. உதாரணமாக, நாம் அனைவரும் பாரதியாருடைய பாப்பாப் பாட்டினை நன்றாக அறிவோம். அந்தப் பாப்பாப் பாட்டிலும் கூட அவருடைய சமூகச் சீர்திருத்த நோக்கமே வெளியாகிறது என்பதைச் சற்று உற்றுக் கவனித்தால் விளங்கும். இதற்கு உதாரணம்,

“சாதிகள் இல்லையடி பாப்பா-குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி, உயர்ந்த மதி, கல்வி-அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்.’

என்ற ஒன்றே போதும். அது போலவே முரசு’ என்ற பாடல் தொகுதியிலும், அடியிற்கண்ட பாடல்கள், இந்த நோக்கத்தை எடுத்துக் காட்டப் போதுமானவை.

“சாதிப் பிரிவுகள் சொல்லி-அதில்

தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார், நீதிப் பிரிவுகள் செய்வார்-அங்கு

நித்தமும் சண்டைகள் செய்வார்.’

“சாதிக் கொடுமைகள் வேண்டாம்; அன்பு

தன்னில் செழித்திடும் வையம்;

ஆதர வுற்றிங்கு வாழ்வோம்:- தொழில்

ஆயிரம் மாண்புறச் செய்வோம்."