பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xfi

‘கண்ணன் என் தந்தை’ என்ற கவிதையிலே, துறந்த நடைகளுடையான்;-உங்கள் சூனியப் பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான் என்ற வரிகள், நமது கவனத்துக்குரியனவாகும்.

இடையிலே நமக்கு நேர்ந்துவிட்டதை எண்ணி அவர் இவ்வாறு பாடுகின்றார். பொய்ச் சாத்திரங்கள் மலிந்து விட்டன என்றும், அவற்றைச் சீர்திருத்துவது அவசியம் என்றும் பாரதியார் கூறுகின்றார்.

மேலவர் கீழவரென்றே-வெறும்

வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம் போலிச் சுவடியை யெல்லாம்-இன்று பொசுக்கி விட்டா லெவர்க்கும் நன்மை யுண்டென்பான் என்று, அதே கவிதையில் பாரதியார் பாடுகின்றார்.

1916-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந் தேதி விதி’ என்று ஒரு கருத்துச் செறிவு மிக்க கட்டுரை ஒன்று எழுதியிருக்கின்றார். அதிலே விதியை மூன்று வகையாகப் பிரித்து வைத் துள்ளார். அவையாவன: தெய்வ விதி, சாஸ்திர விதி, நாட்டு விதி என்பனவாம். -

இந்த மூன்றிலே, தெய்வ விதியை மாற்ற முடியாது என்றும், சாஸ்திரம் மனிதனல் எழுதப்பட்டது; ஆதலால் இன்னும் நிறைவு பெறவில்லை. தெய்வ விதிகளைக் கூடியவரை பின்பற்றியே சாஸ்திரங்களை எழுத முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனல் காலதேச வர்த்தமானங்கள் மாறுபடுகின்றன. தெய்வ விதிகளைப் பற்றிய புதிய விதிகள் வழங்கப்படுகின்றன. அப்பொழுது சாஸ்திர விதிகளை மாற்றுதல் அவசியமாகிறது. என்றும் நாட்டு விதி’ என்பது அர்த்த, நீதி சாஸ்திரங்களின் விதி. இதனைத் தற்காலத்தோர் அரசியல் விதியென்று சொல்லு கிறார்கள். அதுவும் சாஸ்திர விதியோடு சேர்ந்ததுதான். ஆளுல் ம்ற்ற இலக்கணம் முதலிய சாஸ்திரங்களின் விதிகளைக் காட்டிலும் அரசியல் விதிகள் மிகவும் விரைவுடன் மாறுபடுவ தால் இதனைத் தனியாக ஒரு பகுதியாக்கும்படி நேரிட்டது. எனவே, தெய்வ விதிக்குப் பரிபூரணமாக உட்பட்டு சாஸ்திர