பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

வாழி கல்வி செல்வ மெய்தி

மனமகிழ்ந்து கூடியே மனிதர்யாரு மொரு நிகர்

ஸ்மானமாக வாழ்வமே. (விடுதலை)

மாதர் தம்மை யிழிவுசெய்யு

மடமையைக் கொளுத்துவோம்; வையவாழ்வு தன்னிலெந்த

வகையினும் நமக்குளே தாதரென்ற நிலைமை மாறி

ஆண்களொடு பெண்களும் ஸரிநிகர் ஸ்மானமாக

வாழ்வமிந்த நாட்டிலே. (விடுதலை)

9. புதிய கோணங்கி (அதாவது குடுகுடுப்பைக்காரன்)

(குறிப்பு : ஸ்வசரிதையும் பிறபாடல்களும் என்ற தாகுப்பில் இப் பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனல் தைக் கொத்து என்ற நூலில், புதிய கோணங்கி ஒரு தை போலவே உரைநடையும் பாடல் வரிகளுமாக அமைந்துள்ளன. இதுவே முதலில் வந்தது. பிறகு பாடலை ட்டும் தொடர்ச்சியாகச் சேர்த்து வெளியிட்டுள்ளனர். திய கோணங்கி என்ற கதையே பாடலுக்கு விளக்கமும் சர்ந்து, சுவை கொடுப்பதை எளிதில் உணரலாம்.

வேதபுரத்தாருக்குச் சொல்லிய நல்ல குறி தமிழ் ாட்டிற்கும்,பாரதத்திற்குமே சொல்லிய நல்ல குறியாகும். இதுவே பாரதியாரின் ஆசையுமாகும்.