பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை உயர்நீதிமன்றப் பிரதம நீதிபதி, மேதகு. மு. மு. இஸ்மாயீல் அவர்களின்

சமீப காலத்தில் தமிழ் மொழியில் பெரும் புரட்சி செய்த வர்களில் தலையானவர் காலம் சென்ற கவிச்சக்ரவர்த்தி சுப்ரமணிய பாரதியார் ஆவார். ஒரு கவிஞனைப் பற்றி பல மாதிரியாக எண்ணுபவர்கள் உண்டு. ஆனால், எந்தக் கவிஞனையும் தன்னுடைய படைப்பின் மூலமாக அமரத்துவம் பெறவேண்டுமானல் அவனுடைய படைப்பினுடைய கருவூலம் பிரபஞ்சத்தினுடைய பரந்த நன்மையாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மனிதயினத்தினுடையவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பினுடையவோ தன்மையை மாத்திரமோ கருத்தில் கொண்டு, இலக்கியமோ, கவிதையோ படைக்கும் எவனும் அமரத்துவம் பெற்றுவிட முடியாது. அந்த முறையில் பார்க்கும்பொழுது கவிச்சக்ரவர்த்தி சுப்பிரமணிய பாரதியார் அமரத்துவம் பெற்ற வர். காரணம் என்னவென்றால், அவருடைய படைப்பு எந்தக் குறுகிய நோக்கத்தோடும். அல்லது குறுகிய குறிக்கோளுக்காகவும் படைக்கப்பட்டது அல்ல. இக்கால மக்கள் பெரும்பாலும் சுப்பிரமணிய பாரதி. பாரை ஒரு தேசீயகவி’ என்றுதான் கருதுகிறார்கள். அதுவும் கூட இந்தப் பரம்பரையினருக்குத் தெரியுமா என்பது சந்தேகத் சிற்குரியதுதான். ஆல்ை, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சின்னர், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு