பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

போற்றி தாய் என்று தோள்கொட்டி யாடுவீர் புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே நூற்றிரண்டு மலைகளைச் சாடுவோம் நுண்ணிடைப் பெண்ணுெருத்தி பணியிலே.

போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா போற்றி தாய்’ என்று பொற்குழ லூதடா காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம் காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே.

அன்ன மூட்டிய தெய்வமணிக் கையின் ஆணை காட்டில் அனலை விழுங்குவோம் கன்னத் தேமுத்தங் கொண்டு களிப்பினும் கையைத் தள்ளும் பொற்கைகளைப் பாடுவோம்.

8. விடுதலை

குறிப்பு : பெண் விடுதலைப் பாடல்களை மஹாகவி பெண்களுக்கு வழங்கிய மாக்னகார்ட்டா என்று கூறினேன். இது பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவர் மனமார வழங்கிய உரிமைச் சாசனம் எ ன் ப தி ல் தடையேது?

எல்லாரும் சரிநிகர் சமானமாக இந் நாட்டிலே வாழ்வோம் என்று விடுதலை சங்கநாதம் முழக்குகிரு.ர். உண்மையான விடுதலையும் அந்த நல்ல நாளிலேதான் கைவரப்பெறும் என்று தொனிக்கும்படியாக, இப் பாடல் அற்புதமாக அமைந்திருக்கிறது.

பாரத ஸமுதாயம், பாரத ஜனங்களின் தற்கால நிலைமை, நிகழ்கின்ற ஹிந்துஸ்தானமும் வருகின்ற