பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv

பண்டிதரெல்லாம் மூடர். மேன்மை நிலை பெற வேண்டுமானல் கைத்தொழில்கள் பெருகும்படி செய்யவேண்டும். சாத்யமில்லை யென்று சொல்லி ஏங்குவதிலே பயனில்லை. எப்படியேனும் எப்படியேனும் செல்வத்தை வளர்க்க வேண்டும்.

வெள்ளிப் பனிவரையின் மீதுலவுவோம்’ என்று ஒர் அற்புத மான கவிதை பாதியார் எழுதியிருக்கின்றார். பாரதேசத்தின் ஒருமைப்பாட்டு உணர்ச்சியை இங்கே மிக வலியுறுத்திக் கூறுகின்றார். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு என்பதை வேதவாக்காகக் கொள்ள வேண்டும். அதுதான் பாரதத்தை உய்விக்கும் தாரக மந்திரம். இதை உரை நடையிலும் எப்படி வலியுறுத்தியிருக் கிறார் என்று பாருங்கள்.

‘நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது சங்கீதம் நமது நாட் டி ய ம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள்இவையனைத்துக்கும் .ெ பா து ப் பெயர் ஆர்யஸம்பத்து’. காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்திபா ைஷயிலே துளசிதாஸர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம் சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி-இவை யனைத்துக்கும் பொதுப்பெயராவது ஆர்ய ஸம்பத்து. தஞ்சாவூர் கோயில், திருமலை நாய்க்கர் மஹால், தியாகையர் கிர்த்தனங்கள் எல்லோராவிலுள்ள குகைக் கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரபசாஸ்திரியின் புல்லாங்குழல் இவையனைத் துக்கும் பொதுப் பெயர் ஆர்ய ஸம்பத்து. எனவே ஆர்ய ஸம்பத்தாவது ஹிந்துஸ்தானத்தின் நாகரிகம்.

பாரத மக்களையெல்லாம் ஒரே ஜாதியாகப் பிணைத்து விட்டால் இந்த ஒருமைப்பாடு கை கூடிவிடும். ஆனல் இதற்கும் சாதிக்குழப்பங்கள் என்று பெரிதும் விக்னமாகத் தோன்றிப் பேரிடைஞ்சல்கள் விளைவிக்கின்றன. பாரதியார் எதிர்பார்த்தது போலப் பாரததேசத்து மக்கள் எல்லோரும் ஒரேஜாதி என்றாகி விட்டால் மிக நல்லது. ஆல்ை இங்குள்ள நிலைமையில் இவ்வாறு