பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

பெண்மை

22-9-1916க்குப்பிது

பெண் மை வாழ்கென்று கூத்திடு வோமடா பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா தண்மை இன்பநற் புண்ணியஞ் சேர்ந்தன தாயின் பேரும் ஸ்தியென்ற நாமமும்.

அன்பு வாழ்கென் றமைதியி லாடுவோம் ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம் துன்பந் தீர்வது பெண்மையி லைடா சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்.

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் கலி யழிப்பது பெண்க ளறமடா கைகள் கோத்துக் களித்துநின் ருடுவோம்.

பெண் ணறத்தினை யாண்மக்கள் வீரந்தான் பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை; கண்ணைக் காக்கு மிரண்டிமை போலவே காத லின்பத்தைக் காத்திடு வோமடா.

சக்தி யென்ற மதுவையுண் போமடா தாளங் கொட்டித் திசைக ளதிரவே ஒத்தி யல்வதொர் பாட்டுங் குழல்களும் ஊர் வியக்கக் களித்துநின் முடுவோம்.

உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும் உயிரினுக் குயிரா யின்ப மாகிடும் உயிரி னும்மிந்தப் பெண்மை யினிதடா ஊது கொம்புகள், ஆடு களிகொண்டே,