பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உலக கன்னி யுரைப்பது கேட்டிரோ!

உலக வாழ்க்கையி னுட்பங்கள் தேரவும் ஒது பற்பல நூல்வகை கற்கவும் இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே திலக வாணுத லார் நங்கள் பாரத தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம் விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவி லொழிப்பராம்.

சாத்திரங்கள் பல பல கற்பராம் சவுரியங்கள் பல பல செய்வராம் மூத்த பொய்கள் யாவு மழிப்பராம் மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம் காத்து மானிடர் செய்கை யனைத்தையும் கடவுளர்க் கினிதாகச் சமைப்ப ராம் ஏத்தி யாண்மக்கள் போற்றிட வாழ்வராம் இளைய நங்கையி னெண்ணங்கள் கேட்டிரோ!

போற்றி, போற்றி, ஜயஜய போற்றியிப் புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே மாற்றி வையம் புதுமை யுறச்செய்து மனிதர் தம்மை யமரர்க ளாக்கவே ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல் லருளின லொரு கன்னிகை யாகியே தேற்றி யுண்மைகள் கூறிட வந்திட்டாள் செல்வம் யாவினு மேற்செல்வு மெய்திைேம்.