பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

களிலும் பெரும்பாலோர் நடை திருந்தியிருப்பார்கள இன்னும் எத்தனையோ விஷயங்களில் நம்மவர் இங்கிலிங் படித்தவரின் நடையைப் பின்பற்றித் தங்கள் D'm வழக்கங்களை மாற்றிக் கொண்டிருக்கக் காண்கிருேம். அது போலவே இந்த விஷயத்திலும் நடந்திருக்கும்

ஆனல், இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திற்குப் போய் தேறினவர்களிடம் மனசாகரிப்படியும் தன் அறிவுப் பயிற்: யின் விசாலத்திற்குத் தகுந்தபடியும் நடக்கும் யோக்ய!ை மிகமிகக் குறைவாக இருக்கிறது. இங்கிலீஷ் பள்ளிக்கூட களில் எத்தனையோ சாஸ்திரங்கள்-நிஜ சாஸ்திரங்கள் பொய் சாஸ்திரங்கள் இரண்டுங் கலந்தன-எத்தனையே விதச் சாஸ்திரங்கள் பயிற்றுகிரு.ர்கள்.

ஆனல் ஸ்வதந்திரம், ஆண்மை நேர்மை, உண்ம்ை வீரியம்-இவை அத்தனை ஜாக்கிரதையாகக் கற்றுக்கொப் பதில்லை. அதிலும் ஒருவன் தன் மனமறிந்த உண்ண் யின்படி ஒழுக வேண்டுமென்றும், அங்ஙனம் ஒழுக. திருத்தல் மிகவும் அவமானமும் பாவமுமாகும் என்று கற்றுக்கொடுக்கும் வழக்கமே இல்லை. இந்த விஷயத் தைக்கூட வாய்ப்பாடமாய்ப் படிப்பித்துக் கொடுக்கிரு: கள். ஆனல் ஒழுக்கப் பயிற்சி இல்லை. புஸ்தகத்துக்குப் வாய்ப்பேச்சுக்கும் செய்கைக்கும் இடையே லக்ஷ யோசனை தூரமாக நடப்பவர்களுக்கு த்ருஷ்டாந்தி காட்டப் புகுமிடத்தே, நமது நாட்டில் இங்கிலீஷ் பள்ளி கூடங்களில் தேறிவரும் மனிதரைப்போல் இத்தனை சிறந்: த்ருஷ்டாந்தம் வேறெங்கும் கிடைப்பது மிகவும் துர்லி மென்று தோன்கிறது.

“கனவினும் இன்னது மன்னே வினைவேறு

சொல் வேறுடையார் தொடர்பு”

என்று திருவள்ளுவர் பாடியிருக்கிரு.ர்.