பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

பின்னரும், சித்தசுத்தி ஏற்பட வழியில்லாமல் இருக்கிறது. எனவே, அறிவினல் எட்டிய உண்மைகளை மனிதர் ஒழுக்கத்திலே நடத்திக் காட்டுதல் பெருங்கவிடமாக முடிந் திருக்கிறது. ஆத்மஞானத்தின் சம்பந்தமாக கவனிக்கு மிடத்தே, இந்த உண்மையைத் தாயுமானவர், “வாசக ஞானத்தினுல் வருமோ ஸுகம் பாழ்த்த

பூசலென்று போமோ புகலாய் பராபரமே” என்ற கண்ணியில் வெளியிட்டிருக்கிரு.ர்.

இதன் பொருள், ‘வெறுமே வாக்களவாக ஏற்பட் டிருக்கும் ஞானத்தினல் ஆனந்தமெய்த முடியவில்லையே? என் செய்வோம்? பாழ்பட்ட மனம் ஓயாமல் பூசலிட்டுக் கொண்டிருக்கிறதே? இந்தப் பூசல் எப்போது தீரும்? கடவுளே, நீ அதனைத் தெரிவிப்பாய்’ என்பதாம் இதே உண்மையை உலகநீதி விஷயத்தில் ஏற்கும்படி, திருவள்ளுவர்,

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்’

என்ற குறளால் உணர்த்துகிரு.ர்.

இதன் பொருள் ‘வாயில்ை ஒரு தர்மத்தை எடுத்துச் சொல்லுதல் யாவர்க்கும் சுலபமாக ஏற்பட்டிருக்கிறது. ஆல்ை, அந்தச் சொல்லின்படி நடத்தல் மிகவும் துர்லபம்” என்பது.

திருஷ்டாந்தமாக, ஆண்களும் பெண்களும் ஸமான ஒன் ஆத்ம இயல்பும் ஆத்மகுணங்களும் உடையோராத இல், பெண்களை எவ்வகையிலும் இழிந்தவராகக் கருதுதல் :: என்ற கொள்கை ஐரோப்பாவிற் படிப்பாளிகளுக் ளே மிகவும் ஸாதாரணமாகப் பரவியிருக்கிறது

LIIT. F.–5