பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

ரென்ற கொள்கை ஐரோப்பாவிலேயே ஆரம்ப முதல் கிடையாது. இது சமீப காலத்திலே நேர்ந்ததொரு புதிய கொள்கை. ஆதியில், தொழிலாளரின் வளர்ச்சி ஐரோப் பாவில் வேரூன்றியது முக்கியமாக யந்திரசாலைகளின் ஸ்தாபனத்தினலேயாம். அதற்கு முன்னர், அங்குள்ளி தொழிலாளர் பெ ரு ம் பாலு ம் ஜமீன்தார்களிடமும் எண்ணற்ற சிறு சிறு தொழிற்கூடங்கள் வைத்து வேலை செய்த தொழிலாளரிடமும், சிறு சிறு முதலாளிகளிட முமே வேலை செய்து கொண்டிருந்தனர் தத்தம் வீட்டிலேயே தறி முதலியன வைத்து தாமே முதலாளிகளாகவும் தொழி லாளிகளாகவும் வேலை செய்தோர் பலர். இப்படியிருக் கையிலே, துணி நெய்யவும், இரும்பு தறிக்கவும் மரமறுக்கவும், எண்ணெயாட்டவும், பாத்திரங்கள் செய்யவும், முக்கியமான தொழில்களுக்கெல்லாம் யந்திரங் கள் ஏற்பட்டன. அதாவது, மனித சக்தியால் செய்த கொண்டு வந்த காரியங்கள் நீராவியின் சக்தியாலும் மின்சார சக்தியாலும் செய்யப்படலாயின. நீராவியும் மின்சாரமுமோ அபார வலிமைகொண்ட பூத சக்திகள் அவற்றின் திறமைக்கு வரம்பே கிடையாது. ஆயி, மனிதர் சேர்ந்து ஆயிரம் நாட்களிலே செய்தற்குரிய தொழிலை இந்த இயந்திரங்கள் ஒரு தினத்தில் செய்து முடிக்கத் தொடங்கின. எனவே, பெருஞ் செல்வமுdை யோர் தம்முள்ளே கூட்டுகள் கூட்டிக்கொண்டு யந்திரங் களை ஏராளமாகத் தயார் செய்து அவற்றின் மூலமாக நெசவு முதலிய தொழில்களைச் செய்யத் தலைப்பட்டனர் இதல்ை ஏக காலத்தில் பதியிைரம் லக்ஷக்கணக்கான தொழிலாளருக்குத் தொழிலில்லாமற் போய் பட்டின் கிடக்க நேர்ந்தது. இதுதான் ஐரோப்பாவிலே தொழ லாளர் ககதி வேரூன்றி பலப்படத் தொடங்கியதில் காரணம்,