பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

எனப்படும் வைசியர் மூன்றாம் ஜாதி. சரீர லத்தால் மாத்திரமே செய்தற்குரிய தொழில்களைச் செய்வோர் நான்காம் வர்ணம். மற்ற தேசங்களில் நமது நாட்டைப் போல் இந்த வகுப்புக்குக் குறிப்பிட்ட நாமங்களும் விதி களும் இல்லையெனினும், உலக முழுமையிலும் ஒருவாறு இந்த சாதுர் வர்ண்யம் (அதாவது, நான்கு வர்ணங்க ளென்ற வகுப்பு) நெடுங்காலமாக நடைபெற்றுக் கொண்டு வந்திருக்கிறது. சில இடங்களில் மாத்திரம் குருக்களைக் காட்டிலும் அரசர் உ ய ர் ந் த வகுப்பினராகக் கருதப்பட்டனர்; சில நாடுகளில் அரசரே குருக்களாகவு மிருந்தனர். மற்றப்படி உலகமுழுமையிலும் குருக்களும், சாஸ்திரிகளும் தலைமைப் பகுதியாகவும், அரசர், வணிகர், கைத்தொழில் செய்வோர் என்பார் முறையே தனித்த பகுதிகளாகவுமே கருதப்பட்டு வந்தனர்.

ஆனால், சென்ற இரண்டு நூற்றாண்டுகளாக ஐரோப் பாவில் ஸகல ஜனங்களும் ஸ்மானமென்றும், ஆதலால் பிறப்புப் பற்றியேனும், உடைமை பற்றியேனும், தொழில் பற்றியேனும் மனுதருக்குள்ளே எவ்வித மேன்மை.தாழ்வு களேனும் உணவு உடை முதலிய அவசியப் பொருள்களின் அனுபவத்தில் வே ற் று ைம க ேள னு ம் பாராட்டக் கூடாதென்றும் ஒரு புதிய கொள்கை தலைப்பட்டு நடந்து வருகிறது. சென்ற சில வருஷங்களாக இக்கொள்கை அந்தக் கண்டத்தில் மிகவும் வலிமையுடையதாய்விட்டது. ஆரம்ப முதலாகவே இக்கொள்கை ஐரோப்பாவில் தொழி லாளருக்குள்ளே அதிகம் செல்வாக்குப் பெற்றுவந்தது.

நூலாசிரியர்களும், உபாத்தியாயர்களும், மாஸம் 1000 ரூபாய் வாங்கும் குமாஸ்தாக்களும், மாஸம் 2000 ரூபாய் எம்பாதிக்கும் பத்திராதிபர்களும், இவர்களைப் போன்ற பிறரும் தொழிலாளிகளுடன் சேர்த்து கணக்கிடுவதற்குரிய