பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

இனங்களுக்கும் கஷ்டம் ஏற்படாமலும் செய்தற்குரிய பியாபாரமுறைகளைக் கைக்கொள்ளும்படி அவர்கள்ை 1ற்புறுத்த வேண்டும். இங்ஙனம் நம்முடைய நாட்டிலேயே கான்யங்களை நிறுத்திக்கொண்டு, அந்தந்த ஊரில் மிக 1ளியோராக இருப்போரிடம் தக்க வேலைகள் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு உணவு வேண்டியமட்டும் கொடுத்து வர ஏற்பாடு செய்தல் மிகவும் எளிது.

பூரி (ஜகந்நாதம்) பிரதேசங்களில் மிகவும் கொடிய பஞ்சம் இந்த கூடிணத்தில் நடைபெற்று வருகிறது. நம் நாட்டில் ராஜாக்களும், சாஸ்திரிகளும், பெரிய மிராசுதார் 1ளும், ஸாஹாகார்களும், வியாபாரிகளும், வக்கீல்களும், பெரிய பெரிய உத்யோகஸ்தர்களும், வயிறு கொழுக்க, விலாப்புடைக்க, அஜீர்ணமுண்டாகும்படி ஆஹாரங்களைத் தம்முள் திணித்துக்கொண்டிருக்கையிலே, உலகத்தில் வேறெந்த நாட்டிலும் இல்லாதபடி இந்தியாவில் மட்டும். தீராத மாருத பஞ்சம் தோன்றி ஜனங்களை அழிக்கிற கொடுமையைத் தீர்க்க வழி தேடவேண்டிய யோசனை அவர்களுடைய புத்திக்குச் சற்றேனும் புலப்படாதிருப்பதை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் எனக்கு மிகுந்த வருத்த முண்டாகிறது. இத்தனை கஷ்டத்துக்கிடையே ஜாதிக்கொடுமை ஒருபுறத்தே தொல்லப்படுத்துகிறது.

பெரும்பாலும் தாழ்ந்த ஜாதியார்களே ஆதி ஏழை களாக இருக்கிறார்களென்பது மறுக்கமுடியாத விஷயம். கழைப்பும் அவர்களுக்குத்தான் அதிகம். அதிக உழைப்பு மிடத்திவரும் வகுப்பினருக்குள்ளே அதிக வலுவு ஏற்படும் ஆந்தி உலக முழுதிலுமிருக்கிறது. எனினும், நம்முடைய கேசத்தைப்போல் இத்தனை மோசமான நிலைமை வேறெங்குமில்லை.

7 .r .tfr