பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201

இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் இக் கல்வித் திட்டத்தை முழுமனதுடன் ஆதரிக்க வேண்டும் என்று பாரதியார் விழைகின்றார். அவர்களுக்குத் தனியாக அவரவர் மதம் போதிக் கப்படும் என்று உறுதி கூறுகிறார். இதில் எவ்வித மான குழப்பமும் உண்டாக நியாயமில்லை. அவர் எழுதியுள்ளதைக் கவனியுங்கள்-முக்கியமான குறிப்பு:-ஹிந்துக்களல்லாத பிள்ளைகள் இப் பாடசாலைகளில் சேர்ந்தால், அவரவர் மதக் கொள்கைகளை அன்னியமத துரஷணையின்றி பெருந்தன்மையாகக் கற்றுக் கொடுப்பதற்குரியன செய்யவேண்டும்.

இவ்வாறு கூறியிருந்தாலும், மற்ற சமயத் தவர்களுக்குத் தேசீயப் பாடத்திட்டதில் ஹிந்து சமயத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதாகத் தோன்றும்.

இதை அடிப்படையாகக்கொண்டு பலருக்கும் ஏற்றவாறு பாடத்திட்டதை உருவாக்க முடியும். பாரதியார் வழங்கியுள்ள தேசீயக் கல்வித்திட்டம் ஆழ்ந்து கவனத்தில் கொள்ளத்தக்கது. இந்தியப் பண்பாட்டை நன்குணர வழிசெய்வது. தேசிய ஒருமைப்பாட்டை உண்டாக்கவல்லது. “தேசீயக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேச மென்று சொல்லுதல் தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடே யாம் எவ்வளவு அழுத்தமாகப் பாரதியார் கூறியுள்ளார் பார்த்தீர்களா!

இவருடைய கல்வித்திட்டம் மாற்றத்திற் குரியதேயாகும். யாரும் என்றைக்கும் பொருந்திய