பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

இந்த நெசவுத் தொழிலாளர் அத்தனை பேரும் அங்காளியம்மனுடைய அவதாரமென்பதாக ஒரு ஸ்திரியை வணங்குகிறார்கள். அந்த ஸ்திரீ சுமார் நாற்பத்தைந்து வயதுடையவள். சரீரத்தில் நல்ல பலமும், வீரதீர பராக் கிரமங்களும் உடையவள். இவளுடைய புருஷன் இறந்து போய் இருபத்தைந்து வருஷங்களாயின.

இவள் காவி வஸ்திரமும் சடை முடியும் தரிக்கிருள் இவளுடைய முகம் முதிர்ந்த, பெரிய, வலிய, உறுதியான ஆண் முகம்போல இருக்கிறது. அத்துடன் பெண்ணுெவி கலந்திருக்கிறது. இவளுடைய கண்கள் பெரிய மான் விழிகளைப் போல் இருக்கின்றன.

இவள் ஒரு சுப்பிரமணிய சுவாமி கோயில் கட்டிக் கொண்டிருக்கிருள். கோயில் கட்டிடம் பெரும்பாலும் முடிந்து போய்விட்டது. இன்னும் சிகரம் மாத்திரந் தான் வைக்கவில்லை.

இவள் தன் வீட்டுக்குள் ஒரு வேல் வைத்துப் பூஜை பண்ணுகிருள். அதன் பக்கத்தில் இரவும் பகலும் அவியாத வாடா விளக்கு எரிகிறது.

கோயிலும் இவள் வீட்டுக்கு ஸ்மீபத்திலேதான் கட்டி யாகிறது. இவளுடைய வீடு வேதபுரத்துக்கும் முத்துப் பேட்டைக்கும் இடையே ரஸ்தாவின் நடுமத்தியில் சுமை தாங்கிக்கு ஸ்மீபத்தில் இருக்கிறது.

திருக்கார்த்திகையன்று, பிரதி வருஷமும் அடியார்கள் சேர்ந்து இவளுக்கு மிளகாய்ப் பழத்தை அரைத்து உடம் பெல்லாம் தேய்த்து ஸ்நானம் செய்விக்கிறார்கள். அதேைலதான் இவளுக்கு மிளகாய்ப்பழச் சாமியார்” என்ற நாமம் ஏற்பட்டது.